பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இவ்வளவு சிறப்புடைய பிரம்மோற்சவத்தில் திருத்தேரில் எழுந்தருளும் மூர்த்தி யார் தெரியுமா? சோமாஸ்கந்த மூர்த்தி தான். உலகத்தாருடைய பாவத்தைப் போக்கி அருளை வழங்க இறைவன் குடும்பத்தோடே எழுந்தருளி வருகிறான்.

அப்பர் சுவாமிகள் இந்தக் குடும்பத்தைப் பாராட்டுகிறார். அம்மையும் அப்பனும் பிள்ளையுமாக இருக்கும் தெய்வக் குடும்பத்தை அவர் பாராட்டும் முறை அவர் சிவ பக்தர் என்பதைக் காட்டுகிறது.

"நன்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்"

என்று சொல்கிறார். நன்கடம்பனாகிய முருகன் குழந்தை; அவனைப் பெற்றவள் உமாதேவி; அவளைப் பங்கில் உடையவன் சிவபெருமான். குழந்தை, மனைவி இருவரையும் சொல்லிக் குடும்பத் தலைவனையும் சொல்கிறார். மற்ற இருவர்களையும் குடும்பத் தலைவனோடு சார்த்திச் சொல்கிறார். குடும்பத் தலைவனைப் பாடும் பணியை உடையவர் அவர்.

அருணிகிரிநாதர் முருகனைப் புகழ்கிறவர். அவனையே முக்கியமாக வைத்துப் பேசுகிறார். முருகன், அவன் தாய், அவள் கணவர் என்ற வரிசையில் கடைசியில் சிவபெருமானிடம் வந்து முடிக்கிறவர் அப்பர். அருணகிரிநாதரோ சிவன், அவன் தலைவி, அவள் குமாரன் என்ற வரிசையில் மூவரையும் வைத்துக் கடைசியில் குமாரனிடம் வந்து முடிக்கிறார்.

ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன்

தமக்குச் சமானமே இல்லாதவர் சிவபெருமான், ஒருவர். அவரைத் தம் பங்கில் வைத்துக் கொண்டிருப்பவள் உமாதேவி. அவள் குமாரன் முருகன். அவனைப் பற்றிச் சொல்லப் போகிறார்.

தாயின் சார்பு

ங்கே ஒரு புதுமையைக் காண்கிறோம். அப்பர் சுவாமிகள், "பெற்றவள் பங்கினன்" என்றார். உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவன் என்று சொல்வதே பெருவழக்கு. அர்த்தநாரீசுவரன் என்ற அந்தக் கோலத்திலுள்ள இறைவனுக்குப் பெயர். அருணகிரிநாதர் அர்த்தநாரீசுவரனைச் சொல்லவில்லை; அர்த்தேசுவர

344