பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

கல் என்றுதான் பெயர். அதுவும் கல்தானே என்று எண்ணிக் கொண்டு எவனாவது ஒருவன் ரோட்டிலே இருக்கும் கல்லை ஆபரணமாகப் பண்ண நினைப்பானா? இரண்டுக்கும் கல் என்ற பெயர் இருந்தாலும் அது வைரக் கல்; இது சாதாரணக் கல்.

கங்தர் அலங்காரம்

நாமும் சொல்லை வைத்திருக்கிறோம். நாம் சொல்வன எல்லாம் உத்தமமான சொல் ஆவதில்லை. உத்தமமான சொல்லைக் கொண்டு, கந்தருக்கு அலங்காரம் பண்ணினார் அருணகிரிநாதர். நம்முடைய அன்புப் பொருளுக்கு அலங்காரம் பண்ணிப் பார்ப்பது இயல்பல்லவா? தூண் போலத் தம்முடைய மனத்திலே இருக்கிற ஆண்டவனைப் பிறரும் பற்றிக் கொண்டு இன்பம் அடைய, அந்த இறைவன்பால் அவர்களுடைய மனங்களும் ஈடுபடச் செய்ய, அருணகிரிநாதர், தம்மிடமுள்ள மிகச் சிறந்த பொருளாகிய சொற்களின் குவியலினாலே அலங்ங்காரம் பண்ணுகிறார். அந்த அலங்காரந்தான் கந்தர் அலங்காரம்.

"பல இடங்களில் தாம் படும் துக்கத்தைச் சொல்லுகிறாரே, துக்கம் எப்படி அலங்காரம் ஆகும்?" என்பது ஒரு கேள்வி. “கந்தப் பெருமானுடைய அழகைச் சொல்லட்டும்; அவன் கருணா விலாசத்தைச் சொல்லட்டும்; அவன் திருமேனியை வர்ணிக்கட்டும். இவை எல்லாம் அலங்காரம் ஆகும். ஆனால் தாம் படுகிற துன்பத்தை, தம் குறைகளை எடுத்துச் சொல்லி, நான் பாவி என்று சொல்லிக் கொள்வது எப்படிக் கந்தனுக்கு அலங்காரம் ஆகும்?" என்று கேட்கலாம். அதற்கும் விடை உண்டு.

இறைவனுக்குப் பெரிய மாலை சாத்த விரும்புகிறோம். நல்ல நறுமண மலர்களைக் கொண்டு மாலை கட்டச் சொல்லியிருக்கிறோம். மாலை கட்டுகிறவர்கள் என்ன செய்கிறார்கள்? அந்த மாலையின் இடையே ஐந்து அங்குலம் ஆறு அங்குலத்துக்கு ஒரு தடவை ஆடுகூடத் தொடாத இலையைப் பறித்து வைத்துக் கட்டுகிறார்கள். அந்த இலைக்கு வாசனை உண்டா? இல்லை. இருந்தாலும் அந்தக் கதம்ப மாலையின் அழகை, இடையிடையே வைக்கின்ற அந்தப் பச்சிலை அதிகப்படுத்திக் காட்டுகிறது. மலர்களின் வண்ணத்தையும், மணத்தையும் அவை

31