பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடதட கும்பக் களிறு

"வீரர்கள் மிக்க திருவண்ணாமலைக்கு வாருங்கள். ஆலயத்தின் கோபுரத்தைப் பாருங்கள். உள் வாசலுக்கு வாருங்கள். அந்த வாசலுக்கு இடப்பக்கம் இருப்பது யார் தெரியுமா? அந்த வாசலின் வலப்பக்கம் கும்பக் களிறு இருக்கிறதே, அதனுடைய இளைய களிறுதான் இடப்பக்கம் இருக்கிறது. மூத்த களிறு விநாயகர் என்றால் இளைய களிறு முருகன். இளைய களிறாகிய முருகனை நான் கண்டுகொண்டேன்" என்று சொல்லுகிறார். இளைய களிற்றைக் கண்டுகொண்டதாகச் சொன்னாலும் அவரைப் பற்றிப் பின்னே விரிவாகச் சொல்லப் போகிறார். இங்கே மூத்த களிற்றைப் பற்றிச் சற்று விரிவாகப் பேசுகிறார்.

அந்தப் பாட்டைப் பார்ப்போம்.
   அடலரு ணைத்திருக் கோபுரத் தேஅந்த வாயிலுக்கு
   வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையில்
   தடய டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
   கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
அடல் என்றால் அடுதல் என்று பொருள் உண்டு. வீரம் என்று மற்றொரு பொருளும் உண்டு. அடுதல் - அழித்தல் அல்லது சங்காரம் செய்தல். அழித்தல் என்ற பொருளை ஆரம்பத்தில் வைத்து நூல் தொடங்கலாமா? ஆகவே அடல் என்பதற்கு இங்கே வீரம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

'அடல் அருணை' என்பதற்கு வீரத்தையுடைய அருணை என்று பொருள். அருணைக்கு வீரம் எது? "சென்னை பணம் பெருத்த ஊர்' என்றால் சென்னையில் உள்ளவர்கள் பணக்காரர்கள் என்பது பொருள் அல்லவா? "தஞ்சை ஜில்லா சங்கீதம் பெருத்த ஊர் தஞ்சாவூர் மண்ணுக்கே சங்கீதம் சொந்தம்" என்றால், தஞ்சை ஜில்லாவிலுள்ள மக்களுக்குச் சங்கீத ஞானம் மிகுதி என்றுதானே பொருள். அதைப் போலவே அடல் அருணை என்றால், அந்த ஊரில் வாழ்கிறவர்கள் வீரர்கள் என்பது பொருள். அவ்வூரிலுள்ளவர்கள் பெரிய படை வீரராகவோ, படைத் தலைவராகவோ இருக்க வேண்டுமென்பது இல்லை.

வீரத்தில் சிறந்தவன் முருகன். தேவ சேனாபதி என்று அவனுக்கு ஒரு பெய்ர் உண்டு; அமரர்கள் படைக்குத் தலைவன் அவன். வீரம் பொருந்திய அவன் எழுந்தருளியிருக்கும் இடம்

35