பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சின்னதைப் பெரிதாகப் பார்க்கிற தன்மை பொதுவாக இருக்கிறது. ஆனால் அப்பார்வை அமையும் முறைதான் நமக்குத் தெரியவில்லை. யார் குற்றத்தைப் பெரிதாகப் பார்க்க வேண்டும், யாருடைய குணத்தைப் பெரிதாகப் பார்க்க வேண்டும் என்ற வரையறை நம்மிடையே இல்லாததுதான் உலகில் ஏற்படுகிற எல்லாக் கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கிறது.

பெரியவர்களைப் போல நாமும் ஆத்மசோதனை செய்ய ஆரம்பித்தால் நம்மிடையே உள்ள குற்றங்களை நாமே பார்த்துத் திருத்திக் கொள்ள முடியும். நம்மை நாமே வென்று கொண்டு விட்டால், இந்த உலகம் முழுவதும் நம் வசப்பட்டுப் போகும்.

சர்க்கரை மொக்கிய கை

அந்த வகையில் வாழ்ந்த மக்கள் இந்த நாட்டுப் பெரியோர்கள். அவர்கள் நமக்குப் பலவிதமான பழக்கங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள். விநாயக வணக்கமும் அந்த மரபில் வந்ததுதான். கோயிலுக்கு வந்தால் முதலில் பணிவாகக் குட்டிக் கொண்டு வணங்க வேண்டும்; வணங்கினால் ஆண்டவனுடைய பிரசாதம் கிடைக்கும் என்பதை, "வருவார் தலையில் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கையை உடைய விநாயகர் நமக்கு உணர்த்துகிறார். எம்பெருமானுடைய சந்நிதியிலே வணங்கி நின்றால் அவர்களுக்குச் சர்க்கரை கிடைக்கும்; அவர் வாழ்க்கை சர்க்கரை போல இனிக்கும் என்பதை அது குறிப்பிக்கிறது.

3

"கடதட கும்பக் களிறு" என்று விநாயகரைச் சொல்லுகிறார் அருணகிரிநாதர். கடம் என்பது மதம். தடம் என்பது அது பிறக்கின்ற சுவடு. கும்பம் என்பது தலை; மஸ்தகம். மதம் வழிந்தோடுகின்ற சுவட்டோடு கூடிய தலையைப் பெற்ற யானை என்பது பொருள்.

கருணை மதம்

உலகத்தில் நாம் பார்க்கிற யானைக்கு மதம் உண்டு. அந்த யானைக்கு வெறி உண்டானால், மற்றப் பிராணிகளுக்குத் துன்

44