பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிருபாகரன்

இந்த உலகமாகிய ஆற்றுக்குப் போய் வெளுத்துக் கொண்டு வா என்று அனுப்புகிறான். இந்தப் பிறவியில் போக்கிக் கொள்வதற்கென்று பங்கிட்டு அமைத்த வினைக்குப் பிராரப்தம் என்று பெயர். இங்கு நாம் வந்து புதியதாக பூசிக் கொள்ளுகிற சேற்றுக்கு ஆகாம்யம் என்று பெயர்.

இறைவனைப் போலக் கருணை மிக்கவர்கள் ஒருவரும் இல்லை. நாம் கொண்டு வந்த அழுக்குத் துணியை நன்றாகத் துவைத்துக் கொண்டு பரிசுத்தமாக அவன்பால் சென்றால் அதாவது முன்பு கொண்டு வந்த பிராரப்தமாகிற அழுக்கைப் போக்கிப் பின் ஆகாம்யமாகிற சேற்றைப் பூசிக் கொள்ளாமல் சென்றால், முன் பிறவிகளிலே சேர்த்து வைத்திருக்கிற சஞ்சிதமாகிற அழுக்கு மூட்டைகளைக் கொடுத்துத் துவைக்கச் சொல்வதில்லை. "அப்பா, அந்த அழுக்குத் துணிகளை எல்லாம் நான் பொசுக்கி விட்டேன். உனக்குப் புதுச்சட்டை தருகிறேன். இதை அணிந்து கொள்” என்று சொல்லுகிறான்.

இதைத்தான் வேறு வகையில் சாஸ்திரங்கள் சொல்கின்றன. "ஞானம் பெற்றவர்களுக்கு ஆகாம்யம் இல்லை. சஞ்சிதமும் கிடையாது’ என்று சொல்கின்றன.

"குளிக்க வந்தவன் சேற்றைப் பூசிக் கொள்வதுபோல நான் இந்தப் பிறவியிலும் பல பாவங்களைச் செய்து, பல குற்றங்களைச் செய்து ஆகாம்யத்தை அதிகப்படுத்திக் கொண்டு இருந்தேன். பிரபஞ்சம் என்னும் சேற்றைப் பூசிக் கொண்டிருந்தேன். அந்தச் சேற்றை முருகன் போக்கி விட்டான் என்ன ஆச்சரியம்" என்று பெருமிதத்தோடு பேசுகிறார் அருணகிரிநாதர்.


   பேற்றைத் தவம்சற்றும் இல்லாத என்னைப்
      பிரபஞ்சமென்னும்
   சேற்றைக் கழிய வழிவிட்டவா!

பிரபஞ்சம்

ந்தால் ஆனது பிரபஞ்சம். பஞ்ச பூதங்களின் சம்பந்தம் உடையது இந்த உலகம். சித் என்றும், ஜடம் என்றும் இரண்டு வகைப் பொருள்கள் உலகில் இருக்கின்றன. சித் என்பது உயிர்; மற்றவை ஜடம்.

49