பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

படுத்திய அருணகிரிநாதர், அடுத்த பாட்டாகிய இதில், "நான் சிவபிரானுடைய குமாரனால் பிரபஞ்சச் சேற்றைப் போக்கிக் கொண்டேன்" என்று சொல்லுகிறார். அப்படிச் சொல்லும்போது சிவபெருமானை அறிமுகப்படுத்துகிறார்.

இறைவனுடைய குடும்பம் பெரிய குடும்பம். நம்முடைய குடும்பத்தைக் காட்டிலும் பெரியது. நம் குடும்பத்தில் நம் தாய், தகப்பனார், சகோதரர்கள், மனையாட்டி, நம் மக்கள் இருப்பது போலச் சிவபிரானுடைய குடும்பத்தில் அவன் மனைவி உமா தேவியார், அவன் பிள்ளைகள் விநாயகன், சுப்பிரமணியன், அவனுடைய மைத்துனன் திருமால், அவனுடைய பிள்ளை பிரம்மா ஆகியவர்களே இருக்கிறார்கள் என்று நினைக்கலாம். உலகில் உள்ள எல்லா உயிர்களும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. ஒரு வீட்டில் எல்லாவிதமான உறவினர்களும் இருந்தாலும் அது நல்ல குடும்பம் என்று சொல்ல வேண்டுமானால் அந்த வீட்டில் ஒரு வகையினர் அவசியம் இருக்க வேண்டும். வீடு கட்டிக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை அந்த ஒரு வகையினரை அந்த வீட்டில் நிரப்புவதற்காகத்தான் என்று இந்த நாட்டிலுள்ள பெரியோர்கள் சொல்லுகிறார்கள். இல் வாழ்வது அறம் வளர்ப்பதற்காக. அறம் பல காலம் தொடர்ந்து நடை பெறுவதற்காக நல்ல மக்களைப் பெற்றுக் குடும்பத்தை வளர்க்க வேண்டும். பிள்ளைகளைப் பெறுவது பரம்பரையாகத் தர்மம் வளர வேண்டுமென்பதற்காக பிள்ளை இல்லாத குடும்பம் நல்ல குடும்பம் அன்று என்று நம்முடைய பெரியோர்கள் நினைத்தாாகள.

இறைவன் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் அவனோடே இருப்பவர்கள். அவனுக்கும், அவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப் பிள்ளைகளோடு சரியா? இல்லை, இல்லை. இறைவன் குடும்பத்தில் நாமும் சேர்ந்தவர்கள். பெரும்பான்மைக் கட்சி நாம்தாம். ஆண்டவன் நம் அப்பன்; அவன் மனைவி நம் தாய். அந்த அம்மை அப்பனுக்கு உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் குழந்தைகள். இந்த உலகம் எல்லாம் அவன் வீடு.

உலகம் முழுவதும் ஆண்டவன் குடும்பமாக இருக்கிறது.அவன்.குழந்தைகளாகிய முருகனும்,கணபதியும் ஒரு வகையில்

54