பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அருள் புரிய முருகன் கலியுக வரதனாக இருக்கிறான்; ஆறுமுகமுடையவனாக எழுந்தருளுகிறான்.

முருகன் எம்பெருமானுடைய பிள்ளை என்றால், அந்த உறவு நம்முடைய வாழ்க்கையில் நாம் கொண்டாடுகின்ற உறவு போன்றதாகக் கொள்ளக் கூடாது. அந்தப் பிள்ளை வேறு, அவனுடைய தந்தை வேறு என்று இல்லை. அவனுடைய தந்தையின் ஆற்றல் பல இடங்களுக்குச் செல்லாது; ஆனால் அவனுடைய ஆற்றல் பல இடங்களுக்குச் செல்லும்.

ஒரு சாதாரணக் குடும்பத்திலே இருக்கின்ற நாம் நாமே போக முடியாத இடங்களுக்கு நம் பிள்ளையை அனுப்பி, "கல்யாணம் விசாரித்து வந்து விடு" என்று சொல்கிறோம். இந்தச் சின்னச் சம்பிரதாயந்தான் தெய்வக் குடும்பத்திலும் இருக்கின்றது. சிவபெருமான் தானே நேரில் செல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் தன் மகன் முருகனை அனுப்புகிறான்; அல்லது அந்த அவதாரத்திலே சென்று அருள் செய்து வருகிறான். முருகன் சிவபெருமான் குமாரன்; கிருபைக்கு இருப்பிடமாக இருக்கிறவன்.

“பெருமான் குமாரன் கிருபாகரனே!"


சிவபெருமான்

ந்தப் பெருமானாகிய சிவபிரானை அடையாளத்தோடு சுட்டுகிறார்.


   ... ... ... ... செஞ்ச டாடவிமேல்
   ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
   கீற்றைப் புனைந்த பெருமான்.

ஐந்து பூதங்களாலான பிரபஞ்சத்தைப் பற்றிச் சொன்னவர், ஐந்து அடையாளங்களைச் சொல்லிச் சிவபெருமானை முதலில் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

அந்த ஐந்து பொருள்களும் மிக உயர்ந்த பொருள்களா? அப்படிச் சொல்ல முடியாது. ஆண்டவனுடைய திருச் சந்நி தானத்தைச் சேர்ந்து விட்டால் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பேதம் இல்லை. எல்லாமே உயர்ந்தவை ஆகிவிடுகின்றன. விலாச வேறுபாடு அங்கே கிடையாது. அவன் சந்நிதானத்திற்கு வந்த

56