பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி. பகிர்மின்கள் (வை - கூர்மை.) கூர்மையான கதிரை வீசும் வடிவேல் பெருமானை வாழ்த்தி, அவனைத் தொழுது, தர்மம் செய்ய வேண்டும். செருக்கு அற தர்மம் செய்வோருக்குச் செருக்கு உண்டாவதுண்டு. நல்ல காரியங்கள் செய்பவர்கள் கர்வம் அடைவார்கள். தவம் செய்வோருக்கும் அகங்காரம் வந்துவிடுகிறது. மனித வாழ்வில் கடைசியில் நினைவு செத்துப்போகும்; இந்திரியம் செத்துப் போகும்; ஆசை செத்துப் போகும். ஆனால் நான் என்ற உணர்ச்சி கடைசி வரையில் செத்துப் போகாது. எதைச் செய்தாலும், "நான் செய்தேன்' என்ற நினைவு வரும். புகழ் ஆசை நாலு பேர் புகழ வேண்டும் என்பதற்காகச் சிலர் தர்மம் செய் கிறார்கள். அவர் எதிர்பார்த்த புகழ் கிடைத்துவிட்டால அவருக்கு அந்தத் தர்மத்துக்குரிய பயன் அப்பொழுதே கிடைத்தாகிவிடு கிறது; இனி மறு உலகில் கிடையாது. நாம் ஒரு கூலியாளுக்கு இரண்டு ரூபாய் முன் பணம் கொடுக் கிறோம். அவன் நாளைக்கு வந்து செய்ய வேண்டிய வேலைக் காகக் கொடுக்கிறோம். அப்படியின்றி அவனிடம் இரண்டு ரூபாயைக் கொடுத்துவிட்டு, அன்றைக்கே வேலையை வாங்கிக் கொண்டுவிட்டால் நாளை வந்து அவன் செய்கின்ற வேலைக்குப் புதுக் கூலி கேட்பான். நேற்றே கொடுத்தேனே என்றால், நேற்றைக்குக் கொடுத்தது நேற்று வாங்கிக் கொண்ட வேலைக்குச் சரியாகப்போய்விட்டது என்பான். இவ்வுலகில் நாம் லட்ச லட்ச மாகத் தர்மம் செய்துவிட்டுப் பலபேர் புகழ வேண்டுமென்று நினைத்தால், அந்தத் தர்மத்திற்குரிய விலையாகப் புகழ் கிடைக் கிறது. மறுபடியும் பயன் எப்படி வரும்? ஆகவே, தர்மம் செய்யும் போது நான் செய்கிறேன் என்று நினைத்துச் செய்யக் கூடாது; புகழை எதிர்பார்த்தும் செய்யக் கூடாது. 9C)