பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அருள் பாலிக்க வேண்டும் என்ற பெருங்கருணையுடன் இறைவன் சிலரிடம் மிகுதியான பொருளைக் கொடுத்திருக் கிறான். "எந்தக் குழந்தை நாம் கொடுத்த பொருளைக் கையாராப் பிறருக்கு எடுத்துக் கொடுக்கிறது?’ என்று அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அக்குழந்தைக்கு அருளை வழங்குகிறான். அருளைப் பெறுவதற்குத் துணையான பொருளை நம்மிடம் கொடுத்திருக்கிறான் என்று உணர்ந்தால் அவனை வாழ்த்த வேண்டாமா? வேறு உலகத்திலே பயன்படுகிற நாணயமாக மாற்று வதற்கு உரிய பொருளையும் நம்மிடம் கொடுத்து, பயணம் புறப் பட்ட பின்பு, நானும் உன்னுடன் துணையாக வருகிறேன் என்று வேலைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அவனை வாழ்த்துவது நம் கடமை. ஆகையால், வையிற் கதிர்வடி வேலானை வாழ்த்தி வறிஞர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அருணகிரிப் பெருமான் சொல்கிறார். நாலு பேர் காணக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கர்வத்துக்கு அறிகுறி. ஆயிரம் ஆயிரம் கோயில்களை இந்நாட்டில் எழுப்பியிருக்கிறார்களே, அவற்றை எல்லாம் எழுப்பியவர் யார் என்று நமக்குத் தெரியுமா? ஆண்டவன் பெயரை வெளிப்படுத்தி, தம் பெயரை மறைத்துக் கொண்டு விட்டார்கள் அவர்கள். காரணம் என்ன? 'நான் செய்தேன்' என்ற நினைப்பு அற்று, எல்லாம் இறைவன் திருவருளால் நிகழ்க்கின்றன என்ற எண்ணத் தில் தம்மை மறந்து தர்மம் செய்த பெரியவர்கள் அவர்கள். நான்கு குற்றம் "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்" என்றார் வள்ளுவர். "அவன் தர்மம் பண்ணிப் புகழ் பெறுகிறானே; நாம் குறைந்து விட்டோமா? அவனுக்கு மேல் கொடுக்க வேண்டும்" என்று எண்ணிக் கொடுப்பது பொறாமையின் விளைவு. அது அறம் ஆகாது. "இது செய்தால் எனக்குப் புகழ் கிடைக்கும்; பிறர் நமக்கு உதவி செய்வார்கள் என்று நினைப்பது அவா. அதுவும் தவறு. எப்போதும் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருக்கிறா னென்று சிடுசிடுவென்ற முகத்தோடு வீசுவது சினம். "இதைத் 92