பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அதைப் போல உலகமாகிய ஆற்றில், இறைவன் அருளாகிய தெப்பத்தின் மீது ஏறிக்கொண்டவர்களுக்கு, உலகத்தில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் கவலை இல்லை. அவர்கள் உலகத் திலேதான் இருக்கிறார்கள். ஆனால் துன்பம் அடைவதில்லை. மழை பெய்கிறது. வீதியில் போகிறவர்கள் குடுகுடு என்று ஒடி, மழைக்காக ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் போய்க் கொண்டே இருக்கிறான்; மழையில்தான் போய்க் கொண்டிருக்கிறான். மழை எங்கும் பெய்துகொண்டே இருந்தாலும் அவனளவில் மழை இல்லை போல இருக்கிறது. காரணம்; அவன் கையில் குடை வைத்திருக்கிறான். மழை பெய்து கொண் டிருக்கும் பொழுது மழை இல்லாதது போன்ற நிலை அவனளவில் வந்துவிடுகிறது. எம்பெருமானின் திருவருள் நமக்குக் குடையாக இருந்துவிட்டால் உலகில் எத்தனை துன்பம் இருந்தாலும் நம்மள வில் துன்பம் இல்லாத நிலை வந்துவிடும். வேறுபாடு இல்லாத நிலை உலகத்தில் துன்பம் என்றும், இன்பம் என்றும் வேறு பிரித்துப் பகை என்றும் நட்பென்றும் வேற்றுமை கொள்வதற்கு நம் அகங்கார மமகாரமே காரணம். ஞானிக்கு எல்லாரும் நண்பர்கள். உலகத்திலுள்ள குழந்தைகள் எல்லாரும் இறைவன் குழந்தைகள். உலகில் நிகழ்கின்ற எல்லாச் செயல்களும் அவனால் நிகழ்கின் றன. அடிப்பதும், அணைப்பதும் ஒன்றே ஆகும் என்ற ஞானம் அவர்களிடம் இருக்கிறது. கறுப்பு, சிவப்பு, பச்சை என்ற வர்ணங்கள் இருக்கின்றன. எல்லாம் நிறங்களே. முள்ளைப் போலச் சித்திரம் போட்டாலும், பூவைப் போலச் சித்திரம் போட்டாலும் சித்திரங் களே. இரண்டு சித்திரங்களுக்குள்ளும் உயர்வு, தாழ்வு இல்லை. ஆனால் நாம் நம்முடைய அகங்கார மமகாரங்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்து வர்ணங்களுக்குள்ளும் சித்திரங்களுக்கும் உயர்வு, தாழ்வு கற்பிக்கிறோம். பலாப்பழத்தை விரும்புகிறோம்; பாகற்காயை வெறுக்கிறோம். பாகற்காயைச் சுவைத்துச் சாப்பிடு கிறவனும் இருக்கிறான். பலாப்பழத்தை வெறுக்கிறவனும் இருக் கிறான். பலாப்பழம், பாகற்காய் இரண்டும் ஒன்றுக்கொன்று உயர்வு, தாழ்வு, வேறுபாடு அற்றன. இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன் அளவில் வேறுபாடாகக் காண்கிறான். அவன் 98