பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் உள்ளத்திலுள்ள வேறுபாடு பொருள்களுக்குள் உயர்வு தாழ்வை நிர்ணயம் செய்கிறது. அகங்காரம், மமகாரம் அற்ற நிலையில் இறைவன் திருவரு ளோடு ஒன்றுபட்ட ஒருவனுக்கு உலகம் முழுவதும் நல்லதாக இருக்கும். இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரியவர் ஒரு நாள் பிரசங்கத்தில், "உலகத்திலுள்ள எல்லாம் பிரம்மம்' என்று சொன்னாராம். அதை ஒருவன் கேட்டுவிட்டு, "எல்லாம் பிரம்மம்' என்று கூவிக்கொண்டே போனான். போகும் வழியில் ஒரு மதம் பிடித்த யானை வந்தது. அதன்மேல் இருந்த பாகன், 'ஐயா, ஐயா நகர்ந்து போங்கள் என்று சொன்னான். 'போடா போ, எல்லாம் பிரம்மம்' என்று சொல்லி அவன் போனான். யானை துதிக்கையால் பிடித்து அவனைத் தூக்கி எறிந்து விட்டது. நல்லவேளை, அவன் சாகவில்லை. உடனே உபதேசம் செய்தவரிடம் அவன் சென்று, 'எல்லாம் பிரம்மம் எனச் சொன் னிர்களே; அந்த யானை என்னைத் தூக்கி எறிந்துவிட்டதே!' என்றானாம். அதற்கு அவர், "ஆம், சொன்னேன். யானையைப் பிரம்மம் என்று எண்ணினாய். அதன் பாகனும் பிரம்மந்தானே? அந்தப் பிரம்மம் உன்ன்ை நகர்ந்து போ எனச் சொன்னபோது நீ ஏன் நகரவில்லை?' என்றாராம். அவன் ஞானம் போலி ஞானம். உலகம் எங்கும் இறைவன் இருக்கிறான் என்பதை அநுபவப் பொருளாக ஞானிகள் காண்கிறார்கள். சுகமாக இருக்கும்போது நாம் இறைவனை நினைப்பதில்லை. "ஆண்டவன் கோயிலில் இருக்கிறான். தொண்டர்கள் கூட்டத்தில் இருக்கிறான்' என்றெல் லாம் சொல்கிறார்கள். அவன், 'நோயுளார் வாய் உளான்” என் கிறார் சம்பந்தர். நோய் என்றால் துன்பம். யார் யார் துன்பம் உடையவர்களோ அவர்கள் வாயில் இருக்கிறானாம். துன்பப் படும்போதுதான் இறைவனை நினைக்கிறோம். இது மனிதஇயல்பு. எப்போதும் அவனையே நினைப்பது உண்மை அன்பர் இயல்பு. அகங்காரம், மமகாரம் மாறவேண்டும். அகங்காரம் மாறும் முன்பு எனது என்கிற மமகாரம் ஒழிய வேண்டும். மமகாரத்தை ஒழிக்க எனது எனது என்ற எண்ணத்தை மாற்றி, எல்லாம் அவனது என்று சொல்லவேண்டும். அவனது கருவியாக நான் இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டும். நம்மிடம் வரும் வறியவர்களை அவனாகவே 99