பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் ஏழையாக வருவான் எம்பெருமான் ஏழையாக வருவான். இறைவன் அருளை நமக்கு வாங்கிக் கொடுக்க வருகின்ற பிரதிநிதிகள் ஏழைகள் என்று நினைத்தார்கள், நம் நாட்டுப் பெரியோர்கள். நம்மிடம் இறைவன் கொடுத்து வைத்திருக்கிற பொருளை வாங்கிப் போக யார் வருவார்கள் என்று காத்துக் கிடந்தார்கள். தன்னிடம் உள்ள பொருளை இறைவனுடையது என்று எண்ணி ஏழைகளுக்குக் கொடுப்பது அகங்காரம், மமகாரம் இரண்டையும் ஒழிப்பதற்கு வழி. பற்றையும் ஆசையையும் போக்கத் தியாகமே மாற்று. நம்மிடம் உள்ள பொருளை நம்முடையது அல்ல என்று நினைக்கலாம். அப்போது யாருடையது என்ற கேள்வி வரும். அதற்கு இடமே இல்லாமல் இறைவனுடையது என்று எண்ணி, இதை அவன் நமக்குக் கொடுத்திக்கிறான் என நினைக்க வேண்டும். ஆகவேதான் அருணகிரியார், 'வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும் கொடுப்பாயாக’ என்றார். உதவாத பொருள் அப்படி ஏன் கொடுக்க வேண்டும்? கடைசியாகப் போக வேண்டிய கடை வழிக்குப் பயன்படும் பொருட்டு. 'இவ்வுலகில் என்னிடம் இருக்கும் செல்வம் வேறு யாரிடமும் இல்லை. இத்தனை பணம் சேகரித்து வைத்திருக்கிறேனே, இவை யாவும் பயன்படவா?' என்றால், "இந்தப் பணம் பயன்படாது அப்பா. உன்னுடைய கைப்பொருள்களில் எதுவும் உனக்கு உதவாது. இவையேனும் உன் கை கால்களால் ஒடி ஆடிச் சம்பாதித்தவை. ஆனால் உன் உயிரோடு ஒட்டியே பிறந்த உடம்பு இருக்கிறதே, அது உனக்கு உதவுகிறதா? நல்ல வெயிலில் போக முடியாமல், புழுதிச் சூட்டைத் தாங்க முடியாமல், தவிக்கிறாயே. அப்போது உன்னுடைய நிழலில் நீயே கொஞ்சம் தங்கி இளைப்பாற முடியுமா? அல்லது உன் நிழலில் வேறு யாராவது தான் தங்க முடியுமா? உன் உடம்பின் நிழல் எப்படி உனக்கே பயன்படாதோ அதுபோலவே உன் கைப்பொருளும் அந்தக் கடைவழிக்குப் பயன்படாது' என்கிறார். iOf