பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r} கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே. “உங்களிடம் இருக்கும் பொருளை வறிஞருக்குக் கொடுங்கள். அவ்வுலகில் பயன்படுகிற இறைவன் அருளாகக் கிடைக்கும். போகிற வழியில் நமக்குத் துணையாக இருக்கிற வடிவேலனை வாழ்த்திக் கொடுங்கள். அவன் கையில் இருக்கிற வேல் கூர்மை யானது; ஒளியை உடையது. இருட்டில் போகும்போது அது ஒளி கொடுக்கும். பகை வரும்போது அதன் கூர்மை உங்களைக் காப் பாற்றும். உங்களிடம் இருக்கும் பொருளை வறிஞருக்கு என்றும் கொடுத்து, கடை வழிக்குப் பயன்படுகிற அருளாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் படைத்த உடம்பே உங்களுக்கு உதவாத போது உங்கள் கையில் படைத்த தனமா உதவும்? உதாவது' என்கிறார் இந்தப் பாட்டில். வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்குஎன்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள், நுங்கட்குஇங்ங்ன் வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே. (கூர்மையையும், ஒளியையும் உடைய அழகையுடைய வேலாயுதக் கடவுளை வாழ்த்தி, பொருள் இல்லாத வறுமையை உடையவர்களுக்கு இன்ன காலம் என்னாது எந்த நாளிலும், நீங்கள் உண்பது நொய்யுணவாக இருந்தால் அப்போது நொய்யிலும் பிளவளவாவது பகிர்ந்து கொடுங்கள். அப்படிக் கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருந்தால், உங்களுக்கு இங்கே வெயிலுக்கு ஒதுங்கவும் உதவாத உடம்பின் பயனற்ற நிழலைப் போலக் கையில் உள்ள பொருளும் இறுதியில் செல்லும் வழிக்கு உதவாது. நொய்யுணவாக உண்பவரானால் அதிற் பிளவாகிய குறு நொய் யுணவைத் தர்மம் செய்யுங்கள் என்பது பொருள். ஒரு நொய்யில் பாதி எடுத்து வைத்து, "இந்தாருங்கள்' என்று சொல்வது அவர் கருத்தன்று. வை - கூர்மை. வடி - அழகு. இங்ங்ன் - இங்கே. வெறு நிழல் - பயன்படாத நிழல்) 102