பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் மறந்த நிலை இறந்தே விட்டது இவ்வுடம்பே என்று அருணகிரியார் சொல்கிறார். படிப்படியாக அந்த நிலை எவ்வாறு வந்தது என்பதை அவர் சொல்கிறார். உடம்பு உணர்ச்சியற்றுப் போவதற்கு முன்பு படிப்படியாகச் சில முயற்சிகள் செய்தார். அவற்றின் விளைவே இந்த அநுபவம். முருகனை எப்போதும் பாடினார்; பின்பு மெளன. முற்றார்; தியானித்தார். மனத்தால் நினைத்தார். அப்படி நினைக்கும்போது வேறு நினைப்புகளும் இடையிடையே தலைப்பட்டன. அவற்றை மெல்ல மெல்ல ஒட்டினார். முருகனது நினைப்பில் அழுத்தமும் ஒருமைப்பாடும் ஏறியவுடனே மற்ற நினைப்புகள் தாமே ஒழிந் தன. அந்த நினைவில் ஒன்றியபோது முருகனுடைய நினைவு மாத்திரம் இருக்கவில்லை. முருகனுடைய உணர்வே எழுந்தது. நினைவும் உணர்வும் நினைவு என்பது மனத்தோடும் அறிவோடும் ஒட்டியது. உணர்வு என்பது அநுபவத்தோடு இணைந்தது. முருகனுடைய திருநாமம், அவன் திருவிளையாடல், அவன் திருக்கோலம் ஆகியவற்றை நினைக்கலாம். அவனை நினைப்பதென்பது இது தான். அவனை உணர்வதாவது அந்த நினைப்பையும் மறந்து அநுபவத்திலே கரைவது. நினைக்கத் தொடங்கும்போது கடைப் பிடி நழுவுவதும் மீட்டும் நினைப்பதும் நமக்கு வழக்கம். திரும்பத் திரும்ப ஒன்றை நினைத்து நினைத்துப் பழகினால்தான் ஒருமைப்பாடு உண்டாகும். அப்படியே நினைவு கடந்த உணர் விலும் கடைப்பிடி நழுவும் நிலை உண்டு. உணர்வு நினைவாக இழியும். அப்போது மீட்டும் மீட்டும் உணரவேண்டும். அப்படி உணர உணர அந்த உணர்வில் ஒருமைப்பாடு உண்டாகும். 'நினைந்துநினைந்து உணர்ந்துஉணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து" என்பது திருவருட்டா. நினைக்க வேண்டும்; மீட்டும் மீட்டும் நினைக்க வேண்டும். நினைப்பு முறுகின பக்குவத்தில் உணர்ச்சி 111