பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தலைப்படும். உணர வேண்டும்; மீட்டும் மீட்டும் உணர வேண்டும். உணர உணர அவ்வுணர்வில் முதலில் தட்டுப்படும் மேடு பள்ளங்கள் மறையும்; சலனம் ஒழியும். உணர்ச்சி முதலில் தோற்றும்போது புது வெள்ளம் போல வரும்; அலையெறிந்து கொண்டு வரும்; கொந்தளிப்போடு குதிக்கும். மீண்டும் மீண்டும் உணரும்போது ஒருமைப்பாடு உண்டாகும்; அமைதி பிறக்கும். பொறிகளால் உண்டான அநுபவம் மனத்தில் வாசனையாக நிற்கிறது. இறைவனுடைய திருவருளுணர்வு உதயமாகும்போது இந்த வாசனை இடறுவதனால்தான் கொந்தளிப்பு ஏற்படுகிறது. பண்பட்ட நிலத்தில் நீர் பாய்ந்தால் மெல்லப் பாயும். மேடும் பள்ளமுமான நிலத்தில் பாய்ந்தால் வேகம் உண்டாகும்; கொந்தளிப்பு ஏற்படும்? மேடு கரைந்து பள்ளம் நிரம்பினால் அலையில்லாத அமைதி நிலவும். வாசனை காரணமாக மனம் அலைகிறது. புழுதியாக இருக்கிற இடத்தில் நீர் ஊற்றும்போது முதலில் புழுதி கிளம்பும். அப்படியே இறைவனை நினைக்கும்போது மனத்தில் பழைய வாசனைப் புழுதி கிளம்புகிறது. நினைப்பு நிலைதாண்டி உணர்ச்சி நிலை வரும்போது, புழுதி அடங்கினாலும் மண் வாசனை வீசுவதுபோல, மனத்தில் அடங்கி நிற்கும் மாசுகள் மேலே வர முண்டுகின்றன. மனம் சிதறுகிறது. பஞ்சுபோலச் சிந்தனைகள் பரவப் பார்க் கின்றன. ஆனால் உணர்ச்சி முறுகி விட்டால், உணர்ச்சியிலே ஒருமைப்பாடு வந்துவிட்டால், அவை அடங்கிவிடும். திக்குக்கு ஒன்றாக எழுந்த எண்ணங்களும் தலை நீட்டிய வாசனைகளும் மணம் வீசிய வித்துக்களும் அடங்குகின்றன. இறைவன் உணர் வாகிய ஒன்றிலே ஒன்றி மறைந்து மாய்கின்றன. அப்போது ஒருமைப்பாடு வருகிறது. எல்லாம் ஒருமுகப்பட்டு உணர்வு மயமாக நிற்கும் அநுபவம் அது. நினைப்பு உள்ளவரையில் மனம் இயங்கியது. உணர்வு உள்ள வரையில் உள்ளம் இயங்கியது. மனம் நின்ற போது அநுபவத்தை உணரும் உள்ளம் இயங்கத் தொடங்கியது. மனம் இயங்கும்போது உருவம் நாமம் எல்லாம் நினைவு இருந்தன. அவன் நாமமும், உருவமும் தியானத்துக்குத் தட்டுப்பட்டன. 112