பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் மறந்த நிலை மனம் அடங்கி உள்ளம் இயங்கியபோது இன்னதென்று சொல்ல இயலாத ஒன்று உணர்ச்சியிலே தட்டுப்பட்டது. அதை வடிவம் என்று சொல்ல இயலாது; நாமம் என்று சொல்ல இயலாது. ஆனால் ஒன்று இருப்பது தெரிந்தது. அதுவே இந்த அநுபவத் துக்கு நிலமாக இருப்பதும் தெரிந்தது. அப்படி இருக்கும் நிலையே குணம் உள்ள நிலை. அதற்கு வடிவில்லை. ஆனால் அநுபவத்தைத் தரும் இயல்பு உண்டு. அப்படிச் சொல்வதைவிட, நாம் வேறாக நின்று, இதை அநுபவிக்கிறோம் என்ற உணர்ச்சியைத் தரும் வேறுபட்ட நிலை உண்டு என்று சொல்லலாம். அதுதான் குணம். நிர்க்குணம் உணர்வு ஒன்றியது; எல்லாம் ஒருங்கியது; அப்போது அந்தக் குணமும் மறைந்தது. அடையாளம் ஒழிந்தது. நான் அநுபவிக் கிறேன் என்ற உணர்வும் மறைந்தது. மயக்க மருந்தை மூக்கிலே காட்டும்போது டாக்டர் ஒன்று இரண்டு என்று எண்ணச் சொல் கிறார். எண்ணிக்கொண்டே வருகிறவன் கடைசியில் எண்ணுவதை மறந்து தன்னையும் மறந்துவிடுகிறான். அது போன்ற நிலை இப்போது வருகிறது. இது வரையில் ஏதோ பிழம்பாகத் தோன்றிய ஒன்றில் மூழ்கிச் செயலற அநுபவ உணர்ச்சி மாத்திரம் தோற்றியது. இப்போது அதுவும் நழுவியது. அநுபவம் இது, அநுபவிப்பவன் நான் என்ற வேறுபாடே இல்லை. நிர்க்குண மான நிலையில் தன்னையும் மறக்கும் அநுபவம் ஏற்படுகிறது. கருவி கரணம் கழன்ற நிலை இது என்பார்கள். இத்தகைய அநுபவத்தைப் படிப்படியாகச் சொல்கிறார் அருணகிரியார். 'நான் உன்னை உணர்ந்தேன். இடையே வாசனை கலைத்தது. மீட்டும் உணர்ந்தேன். இந்த உணர்ச்சியை அடுத்தடுத்து இயங்கச் செய்தேன்." நின்னை உணர்ந்து உணர்ந்து. 'நினைப்புக் கடந்து உணர்வுலகத்திலே பலமுறை ஊற்றம் பெற்று முறுகியபோது, பல திசையிற் சிதறிய எண்ணமும் உணர்வும் ஒன்றி ஒருமுகப்பட்டன. அப்போது வடிவில்லாத, உருவில்லாத அடையாளமில்லாத, குணமில்லாத, நிர்க்குணமே பூண்டிருந்தேன்." 113