பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் என்று அழைக்கிறார். பின்பு இரக்கம் வருகிறது. "பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு வாழத் தெரியாமல் இருக்கிறீர்களே!' என்று இரக்கப்படுகிறார். வாழத் தெரிந்தவர்கள் உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார், வாழத் தெரிந்தவர்கள் யார் என்று கேட்டால், பெரும்பாலான மக்கள் என்ன விடை சொல்வார்கள்? யார் பணம் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லையோ அவர்களே வாழத் தெரியாதவர்கள் என்றும், பணம் உடையவர்களே வாழத் தெரிந்தவர்கள் என்றும் சொல்வர். அருணகிரிநாதர் அப்படிச் சொல்லவில்லை. இந்த உலகத்தில் சுகமாக வாழலாம்; பல செளகரியங்களைப் பெற்று வாழலாம். அத்தகைய வாழ்வுக்குக் கருவியாய் இருப்பது பணம். அதனால்தான் பணம் உடையவனை வாழத் தெரிந்தவன் என்றும், பணம் இல்லாதவனை வாழத் தெரியாதவன் என்றும் உலகத்தார் சொல்கிறார்கள். பணம் உள்ளவன் அந்தப் பணத்தை வாழ்வதற்குரிய கருவியாகக் கொண்டு பொருள்களை வாங்கிப் பயன்படுத்த இயலும்; அப்படிச் செய்வான் என்ற நினைப்பில், பணமுள்ளவன் வாழ்கிறவன் என்கிறார்கள். அப்படி இல்லாமல் பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொண்டு பயன்படுத்தாமல் இருப்பவனைப் பாராட்டுவதில் பொருள் இல்லை. பணத்தை வைத்துக் கொண்டிருந்தும் வாழத் தெரியாதவன் அவன் என்றே சொல்ல வேண்டும். ஒருவன் பாங்கில் நிறையப் பணம் வைத்துக் கொண்டிருக் கிறான். ஒரு நாள் அவனுக்கு ஆயிரம் ரூபாய் உடனே தேவை யாய் இருக்கிறது. பாங்கியில் பணம் எடுக்க முடியாது; அன்று ஞாயிற்றுக்கிழமை. அவன் ஒடிப்போய்ப் பக்கத்து வீட்டுக்காரனிடம் ஆயிர ரூபாய் கடன் வாங்கி வரவேண்டிய அவசியம் ஏற்படு கிறது. பணம் இருந்தும் சமயத்துக்குப் பயன்படாதபோது அவன் படுகிற பாடு அவன் உள்ளத்துக்குத் தெரியும். அந்த ஒரு நாள் அவன் பிறரை நம்பி வாழ்பவன் ஆய்விடுகிறான். வாழ்நாள் முழுவதும் பணத்தைப் பயன்படுத்தாமல் வாழ்கிறவர்களைப் பற்றி என்ன சொல்வது? அவர்களை எண்ணி இரங்குகிறார் அருணகிரியார் 117