பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலி காள்!உங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி உண்ணஒட் டாது,உங்கள் அத்தம்எல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு மோதும் அடிப்பிறகே? வாழ்வதற்குப் பொருள் அவசியம் என்று உலகம் சொல்கிறது. அருணகிரிநாதரோ அருள் அவசியம் என்று சொல்கிறார். கோழிக் கொடியனுடைய அடியைப் பணிந்து அருள் பெற்றால் இந்தக் குவலயத்தில் வாழலாம். அப்படி வாழத் தெரிந்து கொள்ளாத வர்கள் மதியிலிகள் என்பது அவர் கருத்து. கோழிக் கொடியன் நினைவு நம்முடைய வாழ்நாள் பல ஆண்டுகளை உடையது. ஒவ்வோர் ஆண்டிலும் மாதங்கள் உண்டு. மாதம் பல நாட்களால் ஆனது. ஒவ்வொரு நாளின் ஆரம்பத்தையும் காலை என்று சொல்கிறோம். நாம் தூங்கி விழித்தவுடன் நமக்கு நாள் தொடங்குகிறது. நமக்கு விழிப்பை ஊட்டவும் நாள் ஆரம்பமாயிற்றென்று அறிவிக்கவும் கோழி கூவுகிறது. வாழ்நாளில் பரீட்சைக்குப் படிக்கிற குழந்தை களுக்கு ஒவ்வொரு நாளும் அலாரம் அடிப்பதிலிருந்து தொடங்கு வது போல, பழங்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் கோழி கூவுதலிலிருந்து தொடங்கிற்று. சூரியன் தன் பொற் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு வான வீதியிலே எழுந்து வரப் போகிறான் என்பதை நினைவுறுத்தக் கோழி கூவு கிறது. அதைக் கேட்டவுடனே நாம் எழுந்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். மணி பார்க்கிறவன் கடியாரத்தை மறக்கலாமா? மணி பார்க்கும்போது கடியாரத்தையும் பார்த்து அதற்கு எப்போது சாவி கொடுக்க வேண்டுமென்பதை நினைப்பது முறை. அப்படியே காலையில் கூவி எழுப்பும் அந்தக் கோழியை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்பை மேலும் வளரவிட்டுத் 118