பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் பொருளால் வாழ்வு உண்டா? இப்போது, நன்றாக வாழ்கிறவன் என்று பொருள் நிறைய வைத்துக் கொண்டிருப்பவனைச் சொல்கிறார்கள். பொருளினால் இன்பம் உண்டாவதனால் பொருளுடையோனை இன்பம் உடைய வன் என்று சொல்லிவிடுகிறார்கள். பொருள் நிறைய இருப்ப தனால் மட்டும் இன்பம் உண்டாகாது என்பதை அமெரிக்காக் காரர்களைக் கேட்டால் சொல்வார்கள். அவர்களிடம் உள்ள பொருள் உலகத்தில் வேறு யாரிடமும் இல்லை. பொருளை மலைமலையாகக் குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் பொருள் ஒவ்வொரு கணமும் அவர்களுக்குப் பயத்தைத் தருகிறது. இன்பத்தைத் தரவில்லை. ரஷ்யாக்காரர்களைக் கண்டு ஒவ்வொரு நாளும் அமைதியற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஆண்டவன் திருவருளைப் பெறும் முயற்சி எதுவோ அந்த முயற்சி உடையவர்கள்தாம் உண்மையில் அமைதியுடன் வாழ் கிறார்கள்; இன்பமாக வாழ்கிறார்கள். இறைவனை நினைக்காமல் வாழ்கின்றவர்கள் தங்களை எவ்வளவு அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அருண கிரிநாதர் அவர்களை, 'மதியிலிகாள்' என்கிறார். நல்ல நெறியில் போகாத குழந்தையைப் பார்த்து வையும் உரிமை தாய்க்கு உண்டு. உலகிலுள்ள மக்கள் எல்லாரும் இன்பம் பயக்கும் நெறியைப் பின்பற்ற வேண்டுமென்ற பரம கருணையுடைய தாயைப் போன்ற அருணகிரியார், அந்நெறியே போகாமல் அல்லாத நெறியில் போவோரைப் பார்த்து, 'மதியிலிகாள்' என்று அழைப்பது தவறாகுமா? பொருள் தொடர்ந்து வருமா? "நாங்கள் என்ன, புத்தியில்லாதவர்களா? எங்களிடம் அளவற்ற பணம் இருக்கிறது. நன்செய், புன்செய் நிலங்கள் நிறைந்திருக் கின்றன. நாங்கள் நினைத்தால் எங்கள் புத்தியைக் கொண்டு இன்னும் பத்தாயிரம் மடங்காகப் பெருக்கிக் கொள்வோம்' என்று சிலர் சொன்னார்கள். அவர்களைப் பார்த்து, 'உங்கள் சொத்துச் சுதந்தரம் எல்லாம் மறுமையிலே பயன்படுமா?" என்று கேட்கிறார். 121