பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் 'நீ சொல்வது உண்மையானால் மற்றொரு மாம்பழத்தை வருவித்துத் தா, பார்ப்போம்' எனக் கூறினான். அவர் என்ன செய்வார்? உள்ளம் உருகி இறைவனை வழி பட்டார். பின்னும் ஒரு மாம்பழம் கிடைத்தது. அதைக் கொண்டு வந்து தாம் சொன்னவை யாவும் உண்மை என்று மெய்ப்பித்து, அவன் கையில் கொடுத்தார். கையில் கிடைத்த பழத்தை அவன் புசித்திருந்தால் அவனும் அம்மையாரைப் போல ஞானியாகப் புறப்பட்டிருப்பான். ஆனால் அவன் விதிவிடவில்லை. பழத்தைச் சாப்பிட எடுத்தான். அது மறைந்துவிட்டது. கைக்கு எட்டியது அவன் வாய்க்கு எட்டவில்லை. முதலில் உண்ட பழம் அவனுக்குக் காரைக்கால் அம்மையாரிடம் பக்தியை ஊட்டியது. இப்படியே தமக்குக் கிடைக்கிற பெருளை அநுபவிக்க மாட்டாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் காரணம் என்ன? 'உங்கள் வல்வினை நோய் உண்ண ஒட்டாது' என்கிறார் அருண கிரியார். உண்ணுவதாவது அநுபவித்தல். அநுபவிக் காததற்குக் கையில் பொருள் இல்லாதது காரணம் அன்று. கையில் பொருள் இருந்தும் அநுபவிக்கும் வாய்ப்பு இல்லை. தீவினை கையில் எத்தனை பொருள் சேர்த்து வைத்திருந்தாலும் அவற்றை உண்ண ஒட்டாது. பொன் புளிவிளங்காய் ஆதல் ஒருவர் நிறையப் பணம் சேமிக்க வேண்டுமென்று நினைத்தார். ஒர் அனா இரண்டு அனாவாகச் சேர்த்து ஒரு தங்கக்கட்டி யாக்கினார். அதை தம் குழந்தைகளுக்குக்கூடத் தெரியாமல் ஓர் இடத்தில் ஒளித்து வைத்திருந்தார். அது கடைசிப் பிள்ளைக்குத் தெரிந்தது. அப்பா செத்துப் போன பிறகு அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்ளலாம் என்று அவன் காத்திருந்தான். அவருக்கு நோய் உண்டாகி மிகவும் துன்பப்பட்டார். சாகக் கிடந்த அந்தப் பெரியவருக்கு அப்போது தர்மம் செய்ய வேண்டு மென்று ஒர் எண்ணம் தோன்றியது. ஒளித்து வைத்திருந்த தங்கக் கட்டி நினைவுக்கு வந்தது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை; பேசவும் முடியவில்லை. கையினால், அங்கே அந்தத் தங்கக் கட்டியிருக்கிறது என்று சைகை செய்து காட்டினார். இது மற்றப் பிள்ளைகளுக்குத் தெரிந்துவிடப்போகிறதே என்ற பயம் கடைசிப் 12了