பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலங்கார மாலையில் இது ஐந்தாவது புத்தகம். கந்தர் அலங்காரப் பாடல்களில் ஆறு (21-6) இதில் விளக்கம் பெறு கின்றன. தேனாம்பேட்டை ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் வியாழன் தோறும் மாலை 7 மணி முதல் 8-30 மணி வரையில் நடைபெறும் சொற்பொழிவுகளே இப்போது புத்தகங்களாக உருவாகின்றன என்பதையும், இத்துறையில் பேருதவி புரிகிறவர் அன்பர் பூரீ அனந்தன் என்பதையும் முன்பே தெரிவித்திருக் கின்றேன். சொற்பொழி வாதலின், பல பல கருத்துக்களை விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் நேர்கிறது. எழுத்தாக இருப்பின் இன்னும் சுருக்கிக் கொள்ளலாம். ஒரு கருத்தை விளக்குவதற்குக் காட்டும் மேற்கோளின் மூலத்தை மாத்திரம் சொல்லி விட்டு விட்டால், பேச்சின் வேகத்தினிடையே மேற்கோளின் பொருத்தம் தெளிவாக விளங்காது. ஆகையால் மேற்கோளையும் விளக்கி, இன்னதற்கு அது மேற்கோளாவது என்பதையும் புலப்படுத்த வேண்டியிருக்கிறது. - இந்த விரிவுரைகள் கந்தர் அலங்கார விரிவுரைகள் என்று சொல்வதோடு, ஒரு வகையில் நம்முடைய சமய நெறியைப் பற்றிய விரிவுரைகள் என்றுகூடச் சொல்லாம். ஒரு பாடலின் தலைமையான கருத்து ஒன்றாக இருந்தாலும் வேறு கருத்துக் களும் அதனைச் சார்ந்திருக்கும். அவற்றையும் விளக்க வேண்டும்; அப்போது வேறு கருத்துக்களும் இடையிலே வரும். இந்தப் புத்தகத்தில் வரும் ஆறு பாடல்களில் "மரணப்ர மாதம்', 'தண்டாயுதமும்', 'நீலச்சிகண்டியில்” என்ற பாடல்கள் மரணத்தை வெல்லும் செய்தியைச் சொல்வன. முதல் பாட்டு, மரணப்ர மாதம் நமக்கில்லை யாம்:என்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே கிண் கிண்முகுள