பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 சரணiப்ர தாப! சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா பரணக்ரு பாகர ஞானா கரlசுர பாஸ்கரனே என்பது. இதில் முன் இரண்டடிகளில் பாட்டின் தலைமையான கருத்து வருகிறது. மரணம் இல்லா வாழ்வையும், வேலும் மயிலும் துணையாக நிற்றலையும் அங்கே காண்கிறோம். அவற்றின் பின் முருகனை முன்னிலைப் படுத்தித் துதிக்கிறார் அருணகிரிநாதர். ஆறு வகையாக முருகனை விளிக்கிறார். கிண்கிணி முகுள சரண, ப்ரதாப, சசிதேவி மங்கல்யதந்து ரட்சாபரண, க்ருபாகர, ஞானாகர, சுரபாஸ்கரனே என்பவை அவை. இந்தப் பாடலுக்கு விளக்கம் கூறும்போது, "மரணம் என்ற தவறு நமக்கு இல்லை" என்று சூத்திரம் போல அருணை முனிவர் சொல்லியிருப்பதைத் தெளிவாக்காமல் இருக்க முடியுமா? 'இறைவன் திருவருளைப் பெற்றவர்களுக்கு மரணம் இல்லா வாழ்வு கிடைக்கும் என்று சொன்னால் போதாது. அவர்கள் உடம்பு விட்டுப் போனாலும் அது மரணம் ஆகாது' என்ற உண்மையை விளக்கினால்தான் அது விளங்கும். ஆகவே, மரணம் என்பது இன்னதென்றும், அருள் பெற்றோர் உடலை நீத்து மறைவதற்கும் ஏனையோர்கள் இறப்பதற்குமிடையே உள்ள வேற்றுமை இன்னதென்றும், விடுதலையடைவதையும் சிறை மாற்றம் பெறுவதையும் போன்றவை அவை என்றும் சொல்லி விளக்கியிருக்கிறேன். வேறுவேறு உவமைகளை எடுத்துக் காட்டிக் கருத்தைத் தெளிவாக்கும்போது இந்தப் பகுதி விரிவடை கிறது. பாட்டின் தலைமைக் கருத்தே இதுதானே? இதைத் தெளிவாக விரித்துரைப்பது இன்றியமையாததல்லவா? அடுத்த செய்தி வேலும் மயிலும் துணையாக நிற்கும் திறம், இவ்விரண்டையும் பற்றி முன்பே விளக்கிச் சொல்லியிருத்தலால் இங்கே ஓரளவு சொன்னேன். பிறகு விளிகள் வருகின்றன. கிண்கிணி முகுளம் என்பதை விளக்குவதும், பிரதாபத்துக்கும் கீர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைப்பதும் இவ்விடத்தில் அவசியமாக இருந்தன. முருகன் பிரதாபம் உடையவன் என்பதை அவன் சசிதேவி மங்கல்யதந்துவை 134