பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை ரட்சித்த செய்தியே காட்டுகிறதென்று தொடர்பு படுத்திச் சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கதையைச் சற்றே விரித்துக் கூறினேன். பின்பு, கிருபாகரன் என்பதை விளக்குகையில் அது கீர்த்தியைச் சொல்வது என்று பொருத்திக் காட்டினேன். ஞானாகரன், சுரபாஸ்கரன் என்பவை பின்பு விளக்கம் பெற்றன. இறுதியில் பொருளைத் தொடர்புபடுத்தி முடித்துக் காட்டு கையில் நாம் எவ்வாறு மரணத்தை வெல்லலாம் என்பதைச் சிறிது சொன்னேன். அருட்பா ஒன்று அக்கருத்துக்குத் துணை செய்தது. இப்படிப் பிரித்துப் பிரித்து விளக்கித் தொடர்பு படுத்தி முடிக்கும்போது, இந்தச் சொற்பொழிவு 24 பக்கங்களை அடைத்துக்கொண்டு விடுகிறது. சொற்பொழிவு நிகழும்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. அப்போது சொன்னவற்றில் சில சில பகுதிகளை நீக்கியே இவற்றை உருவாக்குகின்றேன். சொற்பொழிவினுடே தொடர்ச்சி வேண்டும் என்பதை மற வாமல் கடைப்பிடிக்கின்றவன் நான். ஒரே தலைப்பாக இருந்தால் அந்தத் தொடர்ச்சி நன்றாக அமைந்துவிடும். பல செய்திகளைச் சொல்லும் பாடல்களாதலின் பல கருத்துக்கள் இடையிடையே வருகின்றன. அவற்றைத் தொடர்பு படுத்திப் பார்த்தால் பாடலின் கருத்து நன்றாக உள்ளத்தே பதியும். கூடிய வரையில் இந்தத் தொடர்பை எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். “மொய்தாரணி குழல் வள்ளியை வேட்டவன்' என வரும் பாட்டில், வள்ளியை வேட்டதற்கும் தமிழால் வைதாரை வாழ வைப்பதற்கும் உள்ள பொருத்தத்தை ஒருவாறு எடுத்துக் காட்டியிருக்கிறேன். "தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ் சுடரே" என்ற பாடல் அருணகிரியார் வாழ்க்கையோடு தொடர் புடையது என்பதைக் கந்தர் அநுபூதிப் பாடல் ஒன்றை ஆதார மாகக் கொண்டு காட்டியிருக்கிறேன். "கின்னங் குறித்தடியேன்” என்ற பாட்டில் முற்பகுதிக்கும் பிறபகுதிக்கும் உள்ள இயைபு பாட்டில் விளக்கமாக இல்லை. ஆயினும் அருணகிரியார் வேறு வேறு இடங்களில் அருளிய க.சொ.11-10 135