பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு மரணம் தவிர்க்க முடியாதது ஞானம் பெற்றவர்கள் இந்த உலக வாழ்வு நிலையாதது என்பதை உணர்கிறார்கள்; இறைவன் நித்தியமான பொருள் என்பதையும் அறிகிறார்கள். நமக்கு மரணம் நிச்சயம் என்பதைத் தெளிந்துகொண்டு நமக்குத் துணையாக இருப்பது இறைவன் திருவருள் என்று உறுதியாக உணர்ந்து அதனை அடைய முயற்சி செய்கிறார்கள். இந்த இரண்டு வகையான அறிவில் நாம் மரணம் அடைவோம் என்ற ஒன்றை எல்லோரும் அறிவார்கள். சிறு பையனானாலும் உலகில் பிறந்த மக்கள் யாவரும் நிச்சயமாக மரணத்தை அடைவார்கள் என்ற உண்மையை அறிவான். அதற்காகச் சாஸ்திரம் படிக்க வேண்டாம். புராணம் எதையும் படிக்கவேண்டாம். வேதாந்த நூல்களை ஆராய்ச்சி பண்ண வேண்டாம். பிரத்தியட்சமாகப் பார்த்து வருகின்ற உண்மை அது. அப்படி உள்ள மரணம், 'நமக்கு இல்லை' என்று அருணகிரியார் சொல்கிறார். மரணப்ரமாதம் நமக்கு இல்லையாம். பிரமாதம் பிரமாதம் என்பதற்கு வடமொழியில் தவறு என்று பொருள். ஆனால் தமிழில் அதன் பொருள் மாறிவிட்டது. இசைச் கச்சேரி நடக்கிறது. 'அடடா கல்யாணி ராகத்தில் பாடிய பாட்டு எப்படி இருந்தது தெரியுமா? பிரமாதம், பிரமாதம்' என்கிறார் ஒருவர். ஒரு திருமணத்திற்காகப் பந்தல் போட்டிருக்கிறார்கள். மிக அலங்காரமாகப் போட்டிருக்கும் அதைப் பார்த்து, 'பந்தல் மிகப் பிரமாதமாக இருக்கிறதே! என்கிறோம். இப்படி, 'அழகு, இனிது, நன்று' என்று சொல்வதற்கெல்லாம் பிரமாதம் என்று சொல்வது வழக்கமாகப் போய்விட்டது. ஆனால் வடமொழியில்