பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு வருகிறது; விதை முளைத்துச் செடியாகி மரமாகிக் கப்பும் கிளை யுமாகப் படர்ந்து வளர்வதுபோல வளர்கிறது. எந்தப் பொருளுக்குத் தோற்றம் உண்டோ அந்தப் பொருளுக்கு நிச்சயம் அழிவும் உண்டு. 'தோற்றம் உண்டேல் மரணம் உண்டு' என்று சுந்தர மூர்த்தி சுவாமிகள் சொல்கிறார். தோற்றிய உடம்பு நிச்சயமாக மறையும். உடம்பு மறைவதுதான் மரணம். உலகில் யாரானாலும், சிவஞானம் பெற்றவர்களாக இருந்தாலும், நிச்சயமாக இறந்து போவார்கள். எட்டு வயசில் இறந்து போகிறவர்களும் இருக்கிறார் கள். எண்பது வயசில் இறந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். நூறாண்டுக்கு மேல் ஒருவன் வாழ்ந்தான் என்றாலும் அப்புறம் மரணம் அடையத்தான் வேண்டும் உடம்பு எல்லோருக்கும் கடைசியில் மரித்துப் போகும். கடுமையான யோகத்தினால் பல ஆண்டுகள் இளமையோடு வாழ்கிறவர்களானாலும் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகாவது மரணம் அடையத்தான் வேண்டும். உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது. ஐம்பெரும் பூதங்கள் இருக்கும் வரையில், தவம் யோகம் முதலியவற்றால் வாழ்ந்து கொண்டிருக்க வகை தேடிக் கொண்டாலும், ஐம்பெரும் பூதங்களும் மங்கும் பிரளயம் உண்டாகும்போது பஞ்ச பூதங்களா லான உடம்பும் அழிந்தே பேர்க வேண்டும். 'அப்படி இருக்க, அருணகிரிநாத சுவாமி நமக்கு மரணம் இல்லை என்கிறாரே, எந்தத் தைரியத்தைக் கொண்டு சொல்கிறார்? நமக்கு என்று சொல்வதனால் எல்லோரையும் சேர்த்துச் சொல் கிறாரா?' என்ற ஐயப்பாடு எழலாம். எல்லோரையும் சேர்த்துச் சொல் வதற்கு அவருக்கு உரிமை இல்லை. தம்மையே குறிப்பிட்டுச் சொல்கிறார். அப்படிச் சொல்ல அவரிடம் என்ன சாமர்த்தியம் இருக்கிறது? அவரும் உடம்பு படைத்தவர் அல்லவா? மரணத்துக்கு அஞ்சாதவர்கள் மரணம் இல்லாப் பெருவாழ்வு இன்னது என்று முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உடம்பிலிருந்து உயிர் போய் விட்டால் மரணம் அடைந்தான் என்று சொல்கிறோம். ஒருவன் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறான். மற்றொருவன் மார் அடைப்பினால் மரிக்கிறான். வேறொருவன் கார் விபத்தில் அகப்பட்டுக் கொண்டு மாளுகிறான். இப்படி உயிர் உடம்பை 139