பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 விட்டுப் புறப்படுகின்ற முறையில் பல வேறுபாடு இருந்தாலும், மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவாகவே இருக்கிறது. மரணத்தினால் ஏற்படுகின்ற துன்பத்தைக் கண்டு சிலர் எமன் என்றைக்கு வந்துவிடுவானோ என்று பயத்தால் செத்துக் கொண் டிருக்கிறார்கள். 'சாவு என்றைக்கு வந்தாலும் கவலை இல்லை" என்று இருப்பவர்கள் எமனுக்குப் பயப்படுவதில்லை. தாயுமானவர், "சந்தமும் வேதமொழி யாதொன்று பற்றினது தான்வந்து முற்றும் எனலால் சகமீ திருந்தாலும் மரணம்.உண் டென்பதைச் சதாநிஷ்டர் நினைவ தில்லை” என்கிறார். எப்பொழுதும் சகஜ நிஷ்டையில் இருப்பவர்கள், தாம் அடைய வேண்டியதை அடைந்து, புளியம் பழமும் ஒடும் இருப்பது போல உடம்போடு இருக்கும்போதே உடம்பின் வாசனையை எல்லாம் மாய்த்து விட்டு வாழ்கின்ற பெருமக்கள். இந்த உலகத் தில் இருந்தாலும் மரணம் உண்டென்ற பயம் அவர்களுக்கு இராது. மரணம் வந்தால் அதனால் ஏற்படும் துன்பம் அவர்களுக்கு இல்லை. அச்சத்துக்குக் காரணம் மரணத்துக்கு அஞ்சுவது ஏன்? பல காலம் இவ்வுடம்பில் இருந்த உயிர் போவதனால் ஏற்படும் பிரிவுத் துன்பந்தான் அதற்குக் காரணம். கையை வெட்டும் போது ஏற்படும் வலியைப் போல உயிர் உடம்பினின்றும் போகும்போது துன்பம் ஏற்படும் என்பது சரி அல்ல. உண்மையில் ஆண்டவன் ஒரு நிலைக்குமேல் துன்பமோ, வலியோ அதிகமானால் அதை நாம் உணராதிருக்கும் படியான சக்தியைக் கொடுத்திருக்கிறான். ஒருவனுக்கு ஜூரம் 105 டிகிரிக்கு மேல் போய்விட்டது என்றால் உடனே மயக்கம் வந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே மயக்கம் உண்டாவத னால் உடம்பு படுகிற அவஸ்தையை அறிவு தெரிந்து கொள்வது இல்லை. ஆகவே உயிர் போகும்போது, இந்த உடம்பை விட்டுப் போகிறோமே; இனி என்ன ஆகுமோ? என்ற எண்ணத்தினால் ஏற்படும் பயந்தான் பெரிய துன்பமாக விளைகிறது. இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்ற நம்பிக்கையோடு இதனிடம் அதிகப் பற்றுக் கொண்டமையினால் அஞ்சுகிறோம். உடம்பைப் பற்றி மாத்திரம் அல்ல, உடம்போடு சம்பந்தப்பட்ட மக்கள், 14O