பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நன்றாக விளைந்து முற்றின கருப்பங்காடு. கருப்பங்கழியை வெட்டி, ஆலையில் இட்டுக் கருப்பஞ்சாறு பிழிந்து, வெல்லம் சர்க்கரை முதலியவை யாவும் பண்ணி லாபம் அடையலாம் என்று தோட்டக்காரன் நினைத்துக் கொண்டிருக்கிறான். யாரோ பொல்லாதவன் ஒருவன் அந்தக் காட்டில் நெருப்பை வைத்து விட்டான். கருப்பங்காடு தீப்பற்றி எரிகிறது. தீயிலே கருப்பங் கழிகள் எல்லாம் வெந்து சாம்பவாகின்றன. அதைப் பார்த்துத் தோட்டக்காரன் அலறித் துடித்துப் போகாமல் என்ன செய்வான்? ஆனால் வேறு ஒருவன், விளைந்த கரும்பை எல்லாம் வெட்டி ஆலையில் இட்டு வெல்லமாக்கி விட்டான். அவன் தோட்டத்திலே கருப்பஞ் செத்தைகள்தாம் காடாகக் கிடக்கின்றன. அங்கே ஒருவன் நெருப்பை வைத்துவிட்டான் என்றால் அந்தத் தோட்டக்காரன் துன்பப்படுவானா? நானே அந்தக் காட்டில் நெருப்பை வைத்துத் தோட்டத்தைச் சுத்தமாக்க வேண்டுமென்று நினைத்தேன். நல்லவேளை எவனோ வைத்தான். எனக்குப் பாடு இல்லாமல் போய்விட்டது' என்று எண்ணி மகிழ்வான். அதைப் போலவே, இறந்து போகின்ற மக்கள் துன்பப்படுகிற தற்குக் காரணம், 'உடம்பினால் அநுபவிக்க வேண்டியவைகளை இன்னும் அநுபவித்து முடிக்கவில்லையே! இந்த உடம்பு அழிந்து விட்டால் என்ன செய்வது?’ என்ற நினைவே. இந்த உடம்பை வைத்துக் கொண்டு எத்தனையோ இன்பங்களை அடைய வேண்டு மென்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசை ஒவ்வொரு கணமும் மிகுந்து வருகிறது. படிப்படியாக வளர்கிறதே அன்றிக் குறைவது இல்லை. இரண்டு அநுபவித்தால் நான்கு வேண்டுமென்று ஆசை கூடுகிறது. பலவற்றை அநுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருப்ப தனால் உயிருக்கு உடம்பை விட்டுப் போக மனம் இல்லை. ஒருவன் தினமும் கஞ்சி சாப்பிடுகிறான். கஞ்சி சாப்பிடுவதை விட்டுவிடு என்றால் அவன் விடுவதில்லை. கஞ்சிக்குப் பதிலாக அவனுக்குப் பால் கிடைக்கும் என்ற உறுதி இருக்குமானால் அவன் கஞ்சி சாப்பிடுவதை நிறுத்தக் கவலைப் பட மாட்டான். அதைப் போல அறநெறியில் செல்வதன் மூலம் இறைவனுடைய இன்ப அநுபவங்கள் நிச்சயமாக உண்டாகும் என்று தெரிந்தால் இந்தப் பறவியில் இந்திரியங்களினால் ஏற்படுகின்ற இன்ப 142