பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 திருவண்ணாமலை போகிறார். மற்றொருவர் பம்பாயிலிருந்து வேலூர் மார்க்கமாக வருகிறார். மெயில் வண்டியில் ஏறியவர் இறங்கமாட்டார் என்றோ, பாசஞ்சர் வண்டியில் திரும்ப ஏறமாட்டார் என்றோ சொல்ல முடியுமா? எத்தனை இடங்களில் ஏறி இறங்க வேண்டுமானாலும், எந்த வண்டியில் போக வேண்டு மானாலும் போகத்தான் வேண்டும். திருவண்ணாமலை போகும் வரையில் அவர் பிரயாணம் முடிவதில்லை. அதைப் போல உயிர் பதியை அடையும் வரையில் பிறவியாகிய பிரயாணம் செய்யத் தான் வேண்டும். மிக மிக உயர்ந்த பிறவி எடுத்தவன் அடுதத பிறிவியில் உயர்ந்த நிலையிலேயே இருப்பான் என்று சொல்ல முடியாது. மெயில் வண்டியில் போனவர் இறங்கிச் சாதாரண வண்டியில் எப்படிப் போகிறாரோ அதுபோல உயர்ந்த பிறவி எடுத்தவர் அடுத்தபடி தாழ்ந்த பிறவியை அடையலாம். உயிர் எங்கே போய் இறங்க வேண்டுமோ அங்கே போய் இறங்கிய பின்பு தான் வேறு வண்டியில் ஏற வேண்டிய அவசியம் இல்லாமற் போகும். மங்கல மரணம் நமக்குச் சாவு ஏற்பட்டால் மறு பிறப்பும், மீண்டும் சாவும் காத்திருக்கின்றன. ஞானிகளுக்கு அதுவே மரணமில்லாப் பெரு வாழ்வின் தொடக்கமாக இருக்கிறது. இனி வேறு ஒரு பிறவியோ, சாவோ அவர்களுக்கு இல்லை. மரணத்திலும் மங்கல மரணம் ஒன்று. தவறான மரணம் ஒன்று. உலக வழக்கில் எண்பது வயசுக்கு மேல் வாழ்ந்துவிட்டு யாராவது இறந்து போனால் அதைக் கல்யாணச் சாவு என்று சொல்வார்கள். அவன் வாழ்க்கையில் அநுபவிக்க வேண்டியவற்றை அநுபவித்துவிட்டுச் செத்தான்; செய்ய வேண்டிய வற்றைச் செய்து விட்டுச் செத்தான்; அவன் செத்துப் போனதற்கு வருந்த வேண்டியதில்லை. அதனால், பெரியவர் பழுத்த பழமாகிப் போய்விட்டார் என்று நினைத்துக் கொண்டாடுகிறார்கள். உண்மையான கல்யாணச் சாவு இறைவனுடைய திருவருளைப் பெற்று, இனிப் பிறவியே இல்லை என்று உள்ள மரணந்தான். உயிர் விடுதலை பெற்று இறைவனது கழலடியைச் சேர்ந்து எம்பெருமானோடு கல்யாணம் நிகழும் நிலை அது. இதுவே மங்கல மரணம். இறந்து இறந்து பிறவி எடுத்து மரணம் அடை 146