பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 காலத்திலும் எனக்கு என்று அமைந்த துணை அவை. ஆகவே எனக்கு மரணமாகிய தவறு இல்லை' என்கிறார். கிரணக் கலாபி-ஒளி வீசுகின்ற தோகையையுடைய மயில். தவறு இருந்தால் மரணத்தை அடைவான். தவறு செய்யாமல், நெறி தவறிப் போகாதவாறு பாதுகாத்திருப்பவை இரண்டு. வேலும் மயிலும் துணை என்று சொல்லிக் கொண்டே வாழ்க்கையை நேர் நெறியில் செலுத்திக் கொண்டிருப்பவர் அருணகிரியார். ஒளி வீசு கின்ற தோகையை உடைய மயில் நமக்கு எதை நினைவுறுத்து கிறது? "செல்லத் தகாத வழியில் செல்லாதே' என்று நினை வுறுத்துகிறது. வேலோ இறைவன் திருவடியில் ஈடுபடவேண்டும் என்று நினைவுறுத்துகிறது. சூரபன்மன் பலவகையிலும் அறம் அல்லாத வழியில் போனான். இறைவனை நாயகனாகக் கொண்டு வாழாமல், காமினி காஞ் சனத்தை விரும்பினால் சிறந்த வாழ்வு வாழ முடியாது. உலகத் திலுள்ள பொருள்களுக்கு ஆசைப்பட்டு வாழ்ந்த சூரன் என்ன கதி அடைந்தான்? இறைவனுடைய தண்டனைக்கு ஆளானான். அந்தச் சூரனே மயிலாக மாறினான். தவறு செய்து வந்தால் தண்டனை கிடைக்கும் என்பதைக் கிரணக் கலாபி சுட்டுகிறது. இன்னது செய்ய வேண்டுமென்று சொல்வது வேல். இறைவன் திருவடி தொடங்கி முடிவரையில் நீண்டு நின்று அவன் உருவத்தை அது நமக்குக் காட்டுகிறது. 'ஆசை மிகுதி ஆக ஆகச் சூரன் அடைந்த கதியே ஏற்படும்; ஆசைப்படாதே' என்று மயில் கூறுகிறது. ஒளி படைத்த வேல், வழியில் ஞான ஒளியைக் காட்டுகிறது. "அஞ்ஞானத்தை அடையாதே என்று மயிலும், ஞானத்தை அடை என்று வேலும் துணையாக நின்று சுட்டுவதனால், நான் தவறுகளைச் செய்யாமல் தவறு அல்லாத நல்ல வழியில் செல்கிறேன். அதனால் மரணப் பிரமாதம் எனக்கு இல்லையாம்' என்றார் அருணகிரியார். குழந்தையின் உவகை முருகனைப் பார்த்தே இப்படிச் சொல்கிறார். சின்னஞ்சிறு குழந்தை, 'அப்பா, எனக்குச் சொல்லிக் கொடுத்தபடியே இன்று வாத்தியாரிடம் பதில் சொன்னேன். எனக்கு நூற்றுக்கு நூறு மார்க்குக் 148