பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு போனான். தாரகாசுரன் அழிந்தான்; பானுகோபன் மாண்டான்; சிங்கமுகாசுரன் மரித்தான்; சூரபன்மனும் சிதறுண்டான். அதனால் இந்திரன் வாழ்ந்தான். இந்திராணியின் கழுத்திலுள்ள மாங்கல்ய மும் அறுபடாமல் பிழைத்தது. அவள் கழுத்தில் இருக்கிற மாங்கல்ய நாண் அல்லவா முருகனுடைய பிரதாபத்திற்கு அடையாளம்? கிண்கிணி சரண ப்ரதாப சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா Ligeতো! சசி என்பது இந்திராணியின் பெயர். சசி தேவியினுடைய மங்கல நாணைத் தாங்கிக் கொண்டிருந்தவன் முருகன்; பாதுகாத்தவன் முருகன். அவள் கழுத்தில் கட்டிய நூல் அறுபடாமல் இருக்க வேண்டுமென்று தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்டவன் அவன். இதே கருத்தை அருணகிரியார் பின்னால் வேறு வகையில் சொல்கிறார். ஒரு கருத்தையே அலங்காரமாக மாற்றி மாற்றிச் சொல்கிற ஆற்றல் அவருக்கு உண்டு. நான்கு கொம்பு படைத்த ஐராவதமாகிய வெள்ளை யானையின் மேல் வருகிறான் இந்திரன். வெள்ளி மலையே கால் படைத்து நடந்து வந்தால் எப்படி வருமோ அப்படி வருகிற அந்த யானை யின் மேல் வீற்றிருக்கும் இந்திரனால் தன் மனையாட்டியின் கழுத்தில் உள்ள மெல்லிய நூலாகிய மங்கல நாணைக் காப்பாற்ற முடிந்ததா? இல்லை. அவனுடைய இல்லக் கிழத்தி தன் கழுத்தில் இருந்த நூலை வாங்கிடாது, வேல் வாங்கிக் காப்பாற்றியவன் முருகன். 'வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில்கட்டும் நூல்வாங்கி டாது.அன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே." என்கிறார். எம்பெருமான் வீரப்பிரதாபம் உடையவன். சசி தேவி மங்கல்ய தந்து ரக்ஷாபரணனாக இருக்கிறான். அவனது பிரதாபத் திற்கு அடையாளம் சசி தேவியின் கழுத்தில் உள்ள நூல். க.சொ.11-11 f 51.