பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கிருபை வழங்குவான் அவன் வீரப் புகழ் மாத்திரம் உடையவன் அல்லன். ஈகைப் புகழும் உடையவன். பிறருக்கு இல்லையென்னாது கொடுத்துக் கொடுத்துப் புகழை அடைவதற்கு அவன் நிறைய அருளை வைத்திருக்கிறான். பொருளைக் காட்டிலும் சிறந்தது அருள். பொருளை மனிதன் தன்னுடைய முயற்சியினால் பெறலாம். அருளைப் பெற முடியாது. பொருள் பெற்றிருந்தாலும் அருள் இல்லாவிட்டால் அதை அநுபவிக்க முடியாது. யார் யார் தன்னுடைய சரணங்களைப் புகலிடமாகக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அடைக்கலம் தந்து வாரி வழங்க அருள் நிதியை வைத்திருக்கிறான். அழியாத அருட்செல்வத்தை வாரி வழங்கும் பெரிய பணக்காரனாக இருக்கிறான் எம்பெருமான்; கிருபை யாகிய செல்வத்திற்கு ஆகரமாக இருக்கிறான். கிருபையை எல்லோருக்கும் தருவதற்காக நிரம்ப வைத்துக் கொண்டிருக்கிற இடமாக இருப்பவன் ஆகையால், கிருபாகர! என்கிறார். ஞானாகரன் அதுமாத்திரம் அல்ல. மரணம் இல்லையாக வேண்டு மானால் அறியாமை போக வேண்டும். ஞானம் பெற வேண்டும். அவன் அருளால் ஞானம் உண்டாகிறது. உயிர்கள் தங்களுடைய மரணத்தை நீக்கிக் கொள்வதற்கு வழியே அவன் தாளைப் பற்றுவது என உணர்ந்து, பற்றிய பின் ஞானத்தால் உய்வு பெறுகிறார்கள். அறியாமையில் உழன்று மரணத்தை அடைகின்ற உயிர்களுக்கு அருள் கொடுத்து ஞானத்தையும் கொடுத்து மரணமில்லாப் பேரின்ப வாழ்வைப் பெறும்படி செய்கிறான். அந்த ஞானத்துக்கு இருப்பிடம் அவன். ஞானாகர! தேவசூரியன் அவன் தேவர்களுடைய இருளைப் போக்கும் ஞாயிறாக இருக்கிறான். இராத்திரி காலத்தில் பொருள்களினுடைய உண்மை 152