பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மரணம் இல்லா வாழ்வுக்கு வழி அருணகிரியாரைப் போல நாமும் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழலாம். வீணாகப் பயனின்றிக் காலத்தைக் கொன்றால் காலன் நம்மைக் கொன்றுவிடுவான். காலத்தைக் கொல்லாமல் பயன்படுத்திக் கொண்டால் காலனைக் கொன்றுவிடலாம். காலத்தை வீணாக்காமல் இறைவனோடு தொடர்புடைய நல்ல விஷயங்களைச் சொல்வதைக் காலrேபம் எனச் சொல்வது வழக்கம். நம்முடைய எண்ணங்களை எல்லாம் ஆண்டவன்பால் செலுத்தி வாழ்ந்தால் காலம் போய்க் கொண்டிருக்கும். ஆனால் போவது தெரியாது. நெடுந்துரம் பிரயாணம் செய்கிறவன் ரெயில் வண்டியில் ஏறிப் படுத்துக் கொண்டு விடுகிறான். காலையில் எழுந்து பார்த்தால் முந்நூறு மைல் பிரயாணம் செய்திருப்பது தெரிகிறது. அவனுக்கே தெரியாமல் முந்நூறு மைல்கள் போய் விடுகின்றன. விழித்துக் கொண்டே இருந்தான் என்றால் கொஞ்ச தூரம் பல பல காட்சிகளைப் பார்த்து வருவான். கண்ணில் கரித் துண்டு விழும்; கசக்கிக் கொள்வான். கண் மிக வெப்பமாக இருக்கும். 'இன்னும் பத்து மைல்கூடப் போகவில்லையா?” என்று கவலைப்படுவான். தூங்குகிறவனுக்கோதுரம் போவது தெரிவதில்லை. வாழ்க்கையில் நாம் எத்தனை காலம் வாழ வேண்டும் என்ற வரையறை இருக்கிறதோ அதுவரையில் தூங்க வேண்டும். தூங்கு வதாவது, மனம் இறைவன் அடியில் ஒருமைப்பட்டு இருத்தல். வேலும் மயிலும் துணை என்று நினைத்து, கிண்கிணி முகுள சரணங்களில், க்ருபாகரனுடைய, ஞானாகரனுடைய, சுர பாஸ் கரனுடைய பாதங்களில் உறங்கினால் காலம் போவது தெரியாது. காலனைக் கொன்றுவிடலாம். வாழ்க்கையில் ஏற்படுகிற தாபம் நம்மை அண்டாது. காலம் போய்கொண்டே இருந்தாலும் நம்மள வில் நின்றுவிட்டது போல ஆகும். அதன் முடிவு கால ஜயம். அதனால் பெறுவது மரணமில்லாப் பெருவாழ்வு. “நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்துநெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும்கண் ணிரதனால் உடம்பு நனைந்துநனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுடைய நாயகனே என்று 154