பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியை வேட்டவன் தேவர்களுடைய மகிழ்வுக்காகத் தேவசேனையை மணம் செய்து கொண்டான் முருகன். ஆனால் வள்ளி நாயகியிடத்தில் தானே காதல் செய்து, அவள் விரட்டி ஒட்டினாலும் போக மாட்டேன் என்று காத்திருந்து, அவள் அன்பை இரந்து நின்றான். கூந்தற் பூ வள்ளியை, 'மொய்தார் அணி குழல் வள்ளி' என்று அருண கிரியார் வருணிக்கிறார். மலரால் ஆகிய மாலையை அப்பிராட்டி தலையில் அணிந்திருக்கிறாள். அந்த மாலையில் மணம் இருப்ப தனால் வண்டு மொய்க்கிறது. நல்ல மணம் பொருந்திய மலரை அணிவது தமிழ்நாட்டுப் பெண்களின் வழக்கம். கூந்தலுக்கு இயற்கை வாசனை இருந்தாலும் மலர் தன் மணத்தையும் அதற்கு ஊட்டுகிறது. அது மாத்திரம் அல்ல. மலருக்குத் தண்மை உண்டு. ஆதலால் பூ வைத்துக் கொண்டால் தலை குளிர்ச்சியாக இருக்கும். நம் நாட்டில் சுமங்கலிகள் அடிக்கடி தலை முழுகுவது இல்லை. ஆகையால் தலை குளிச்சியாக இருப்பதற்கு மலரைச் சூடுவது வழக்கம். பெரும்பாலும் மலரைக் கூந்தலுக்குள்ளே, கொண்டைக் குள்ளே செருகிக் கொள்வார்கள்; பிறர் காணும்படியாகச் சூட்டிக் கொள்ள மாட்டார்கள். பிறர் கண்ணில் படும்படியாகப் பூ வைப்பது தவறென்று நாடோடியாக வழங்கும் முத்து வீராயி பாட்டுச் சொல்கிறது. 'பெண்கள் பூத்தேடி வைக்க வேணும்; வைத்தால் பிறர் அறியாமல் இருக்க வேணும்; கொண்டைமேல் பூத்தோண வைத்தால் வேசிஎன்று கூறுவாரே முத்து வீராயி.” மலரைச் சூட்டிக் கொள்வதால் கூந்தல் நறுமணம் பெறுவது மாத்திரம் அல்ல; மூளைக்குக் குளிர்ச்சி உண்டாகிறது. வள்ளி நாயகி காட்டில் வாழ்ந்தாள். காட்டில் மலருக்குப் பஞ்சமா? காசு கொடுத்து வாங்க வேண்டுமா? எங்கே பார்த் தாலும் மலர் பூத்துக் குலுங்கும். பறித்து அணிந்து கொள்ளலாம். வள்ளியம்மை நடந்து சென்றால், அவள் கூந்தலில் உள்ள மலரின் நுட்பமான மணம் வள்ளி போகிறாள் என்பதைக் காட்டும். அவளை முருகன் வேட்டான். 157