பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியை வேட்டவன் முருகனது தமிழ்க் காதல் அந்த முத்தமிழின்பால் முருகப் பெருமானுக்குக் கரையில்லாக் காதல் உண்டு. தமிழால் புகழ்கிறார்கள் என்பதால் அல்ல. முத்தமிழால் வைதாலும் வசவு என்று பார்க்க மாட்டான்; அது தமிழ் அல்லவா என்று நினைத்து இன்புறுவான். பல காலத்திற்கு முன் சென்னை அரசாங்க நிர்வாக சபையில் ஒரு பெரியார் அங்கத்தினராக இருந்தார். ஏழாம் எட்வர்டு இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலம். அப்போது வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவுக்கு வந்தார். அப்போது இந்தியாவின் தலைநகரம் கல்கத்தா. இந்தியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கியிருந்ததால், கல்கத்தாவுக்கு வந்து இறங்கிய இளவர சருக்குப் பெரிய வரவேற்பு நிகழ்ந்தது. கன்னியா குமரியிலிருந்து இமயமலை வரையில் உள்ள பாரத நாட்டின் எல்லாப் பாகங்களி லிருந்தும் போலீஸ்காரர்கள் கல்கத்தா வந்து குவிந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் பலர் போயிருந்தார்கள். இவர்களுக்கு, அங்கே எல்லோரும் இந்தி, ஆங்கிலம் பேசுவதைக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது. தமிழில் யாராவது பேச மாட்டார்களா? தமிழ் பேசுகிற முகம் கண்ணில்படாதா?’ என்ற ஏக்கம் உண்டாகிவிட்டது. முன்னே சொன்ன அறிஞர், மகனை அழைத்துக் கொண்டு கல்கத்தாவுக்குப் போனார். பெருங்கூட்டத்தில் அவர்கள் போகும் போது இரு பக்கமும் அணி வகுத்து நின்ற போலீஸ்காரர்களுள் ஒருவன் தன் கால் பூட்ஸினால் பையனின் காலை மிதித்து விட்டான். 'அட முட்டாள்' என்று அந்தப் பையன் திட்டினான். அதைக் கேட்டவுடனே போலீஸ்காரன், 'தம்பி நீ எந்த ஊர்?" என்று அன்போடு அருகில் வந்து கட்டிக் கொண்டான். அவன் தன் செவியில் தமிழ் விழாதா என்று ஏங்கிக் கிடந்தவன். பையன் தமிழில் அவனை வைதபோதிலும், அவன் அதை வசவு என்று பார்க்கவில்லை. அது தமிழ் என்று உணர்ந்தான். ஆதலால் அவனை அன்போடு தட்டிக் கொடுத்து அணைத்தான். வைதாரையும் வாழ வைக்கிற அன்பு அவனிடம் இருந்தது. தமிழ் முகத்தைப் பார்க்க மாட்டோமா, தமிழ்ச் சொல்லிக் கேட்க மாட்டோமா!' என ஏங்கியிருந்த போலீஸ்காரனுக்கு, 'அட முட்டாள்" என்ற வசவுச் சொல்லும் இனிமையாகத் தோன்றி, உள்ளத்தில் அன்பு 1.59