பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியை வேட்டவன் மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும்அங்கு வாழவைப்போன் என்று இரண்டையும் இணைத்துச் சொன்னார். பின்னாலே உள்ள தற்கு முதலில் சொன்னது காரணம். குற்றம் காணா அன்பு மற்றொன்று: இணக்கமான அன்பு உடையவர்கள் எந்தப் பொருளிடத்தில் அன்பு வைக்கிறார்களோ, அப்பொருளிடத்தில் உள்ள குறைகளை மறந்து விடுவார்கள். இது தூய அன்புக்கு அறிகுறி. நம் வீட்டுக் குழந்தை மூக்கை ஒழுக விட்டுக் கொண் டிருந்தால் அது நமக்கு அருவருப்பை உண்டாக்குவது இல்லை. பக்கத்து வீட்டுக் குழந்தையானால் வெறுக்கிறோம். இரண்டின் மூக்கும் ஒழுகுகின்றன. ஆனால் ஒன்று நம் அன்புக்கு உரியது. ஆகவே, அதனிடத்தில் உள்ள குற்றத்தை நாம் பாராட்டுவதில்லை. 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்பது பழமொழி. நாம் எத்தனைக்கெத்தனை அன்பு பண்ணுகிறோமே, அத்தனைக்கு அத்தனை குற்றத்தை மறக்கிறோம். நம்மிடத்தில் நமக்கு அளவற்ற அபிமானமும் அன்பும் இருக்கின்றன. அதனால் நம்முடைய குற்றம் நமக்குத் தெரிகிறது இல்லை. பிறருடைய குற்றம் எப் பொழுது மறைய ஆரம்பிக்கிறதோ, அப்போது அவர்களிடத்தில் அன்பு உண்டாகிறதென்று தெரிந்து கொள்ளலாம். தமிழால் தன்னை அணுகுகிறவர்களின் குற்றம்கூடத் தெரியாத அளவுக்கு முருகனுக்கு என்ன அவ்வளவு விருப்பம்? முருகன் எல்லா உலகத்திற்கும் தலைவன்; அப்படியிருக்கத் தமிழ் நாட்டு மக்களின் மொழியாகிய தமிழிடத்தில் மட்டும் அத்தனை விருப்பம் உண்டாகக் காரணம் என்ன? தமிழ்நாடும் முருகனும் பல மூர்த்திகளாகப் பக்தர்கள் வழிபடும் தெய்வம் ஒன்று தான். அந்தத் தெய்வமே முருகன் என்ற கோலத்தோடு வருகிறது. அந்தக் கோலத்தை நன்றாக உணர்ந்து பாராட்டுகிறார்கள் தமிழர்கள். முருகனுக்கு வேறு எங்கும் கிடைக்காத மதிப்புத் தமிழ்நாட்டில் 16i