பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கிடைக்கிறது. அதனை விரும்பும் இடத்தில்தானே அந்தக் கோலத்தில் இருப்பவன் அதிக விருப்பம் பூண்டு இருப்பான்? 'டை கட்டிக் கொண்டு, நான்கு கை உடைய கறுப்புச் சட்டை அணிந்து தலையில் பெரிய தலைப்பாகையுடன் ஒருவர் போகிறார். அந்தக் கோலத்தை யார் மதிக்கிறார்கள்? அக்கோலத் திற்கு வீட்டிலே மதிப்பு இல்லை; வீதியிலும் இல்லை. ஆனால் நீதி மன்றத்தில் மதிப்புக் கிடைக்கிறது. அதே போல் எல்லா நாட்டுக்கும் பொதுவானவன் முருகனாகிய கடவுள் என்றாலும், அவனுடைய முருகக் கோலத்திற்குத் தமிழ் நாட்டில்தான் பெருமதிப்பு இருக்கிறது. ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களும் உடையவனாகி, வேலும் வில்லும் தாங்கி, மயில் மேல் வரு கின்ற பெருமானை வாழ்த்தி, வணங்கி அன்பு செய்கிறவர்கள் தமிழர்களே. ஆதலால் அவன் அவர்களிடம் கருணை கொண்டு தன் அருள் விளையாடல்களைப் புரிகிறான். 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்' என்பது ஒரு பழமொழி. முருகனோ குழந்தைக் கோலங் கொண்ட தெய்வம். அவனைத் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். அதனால் அந்நாட்டு மக்களிடத்தில் அன்பு கொண்டவனாக இருக்கிறான். கார்த்திகேயன் வடக்கே உள்ளவர்களுக்கு முருகன் என்ற பெயர் தெரியாது. சுப்பிரமணியன் என்ற பெயர் ஒரளவு தெரியும். பெரும்பாலும், 'கார்த்திக்’ என்று சொல்வார்கள். கார்த்திகேயன் என நாம் சொல்லும் அந்தச் சொல்லே அப்படி வழங்குகிறது. அந்த நாட்டில் முருகனைப் பிரம்மசாரி என்று நினைக்கிறார்கள். அது மாத்திரம் அல்ல; பெண்கள் முருகனைத் தரிசிப்பது இல்லை. நான் பூனாவுக்குப் போயிருந்தேன். அந்நகரை அடுத்து ஒரு மலை இருக்கிறது. அதற்குப் பார்வதி மலை என்று பெயர். அங்கு முருகப் பெருமான் ஆறுமுகங்களோடு மயிலின்மீது தனியே எழுந்தருளியிருக்கிறான். கார்த்திகேயனுடைய திருவுருவம் பளிங் கினால் அமைந்தது. என்னுடன் வந்த நண்பர், 'கார்த்திகேயருக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. அவர் பிரம்மசாரி, யாராவது பெண் வந்தால் அவளை அவர் பற்றிக் கொள்வாராம். ஆகை யினால் அவரைப் பெண்கள் வந்து தரிசிப்பதில்லை" என்றார். 162