பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியை வேட்டவன் எனக்கு உடனே ஓர் எண்ணம் உண்டாயிற்று. 'தமிழ் நாட்டு வள்ளியம்பெருமாட்டியைக் கண்டுகளித்த கண்ணால் வடநாட்டுப் பெண் யாரையும் பார்ப்பது இல்லை என்று இருக்கின்றாயா, முருகா?’ என்ற கருத்தை வைத்து ஒரு கவி பாடினேன். வங்காளத்திலும் கார்த்திகேயன் பிரம்மசாரி என்ற கருத்தே நிலவுகிறது. உலகம் யாவும் சக்தி மயம் என்ற கருத்தை விளக்க பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார். ஒருநாள் முருகக் குழந்தை ஒரு பெண் பூனையோடு விளையாடிக் கொண்டிருந்தானாம். விளையாட்டில் அவன் கை நகம் பூனையின் மேல் கீறிவிட்டது. விளையாட்டு முடிந்து, 'அம்மா” என்று தன் தாயினிடம் ஒடிப் போன போது, "வாடா, குழந்தை' என அவனை இரு கைகளையும் நீட்டி வரவேற்றாள், பரமேசுவரி. அப்பொழுது பார்த்தால், பிராட்டியின் மேலும் நகத்தின் கீற்ல் இருந்ததாம். 'இது என்ன அம்மா, ' என்று கேட்டதற்கு, 'நீ பூனையோடு விளையாடினாய் அல்லவா? உன் நகம் பூனையின் மேல் பட்டது; என் மேலும் பட்டது' என்று சொன்னாளாம். முருகனுக்கு அப்போது உலகத்தில் உள்ள பெண் இனம் எல்லாம் அம்மாவே என்ற உண்மை தெரிந்ததாம். "உலகில் உள்ள எல்லாப் பெண்களும் அம்மாவாக இருப்பதால் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன்' என்று பிரம்மசாரியாகவே இருக்கிறானாம். இந்தக் கதையைப் பரமஹம்சர் சொல்லி, சர்வம் சக்தி மயம் ஜகத்’ என்ற தத்துவத்தை நிலை நாட்டுகிறார். ஆகவே, முருகன் வள்ளிமணாளனாக இருக்கும் கோலம் வடநாட்டவர்களுக்குத் தெரியவில்லை. வள்ளி மணாளனாக வரும் முருகப் பெருமானின் திருக்கோலத்தை வழிபடும் வழக்கம் இத் தமிழ் நாட்டில்தான் இருக்கிறது. மிகப் பழங்காலம் முதற் கொண்டே முருகனை இந்நாட்டுத் தெய்வமாகத் தமிழர்கள் வழி படுகிறார்கள். பரிபாடலில் கண்ட செய்தி பரிபாடல் என்ற நூலில் ஒரு புலவர் தமிழ் மரபில் முருகனுக் குள்ள அபிமானத்தைச் சொல்கிறார். திருப்பரங் குன்றத்தில் ஒரு சண்டை நடக்கிறது. கொலைச் சண்டை நடக்கவிலை; இரத்தம் 3.63