பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 படுத்தேன்? என் முடிச்சை நீர் திருடிக் கொண்டு வீட்டீரே' எனக் கேட்கிறார். நமக்குக் கோபம் வந்தால் நாம் வைவது கேட்கச் சகிக்காமல் இருக்கும். அவர் புலவராதலாலே அவர் கோபம் பாட்டாக வந்தது; 'என்னையா பிள்ளையாரே, பேசாமல் இருக்கிறீர்? உம்மைத் தவிர வேறு யார் இங்கே வந்தார்கள்? நீர்தாம் என் முடிச்சை அவிழ்த்துக் கொண்டு விட்டீர் உம்முடைய தம்பி யார் என்று எனக்குத் தெரியும். தமிழ்நாட்டுப் பெண் வள்ளியைத் திருடிக் கொண்டு போனவன் அவன். உம் தாயாருடன் பிறந்த மாமன் ஒரு வம்பன், மாமாயன்; அவன் நெய் திருடி. நீரோ இப்போது என் முடிச்சைத் திருடி விட்டீர். எப்படி ஐயா கோத்திரத்திற்கு உள்ள குணம் உம்மைவிட்டுப் போகும்?' என்று கேட்கிறார். 'தம்பியோ பெண்திருடி தாயா ருடன்பிறந்த வம்பனோ நெய்திருடி மாமாயன் - அம்புவியில் மூத்தபிள்ளை யாரே, முடிச்சவிழ்த்தீர்; போமோ கோத்திரத்திற் குள்ள குணம்?" ஏசுவதைப் போலப் பாட்டு இருந்தாலும் இது வசவு அன்று; நிந்தாஸ்துதி. வசவு போன்று தோன்றும்படி இறைவன் புகழை முத்தமிழால் சொல்கிறார்கள் புலவர்கள். அந்தத் தமிழைக் கேட் பதில் இறைவனுக்கு விருப்பம் உண்டு. முருகனும் அத்தகைய வசவைக் கேட்டான். அதைச் சொன்னவர்களை வாழ வைப்பான். முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன். மாமன் புகழ் அத்தகைய முருகனுடைய உறவினர்கள் யார்? அதைப் பின்வருகின்ற அடிகளில் சொல்கிறார் அருணை முனிவர். அருணகிரி நாதருக்கு விநயம் தெரியும். ஒருவரை எப்படி எப்படிப் புகழ்ந்தால் மகிழ்விக்க முடியும் என்கிற சாதுரியம் தெரியும். மாப்பிள்ளையிடம் போய் மாமனாரை இழிவுபடுத்திப் பேசினால் அது எப்படி விளையும் என்று அவருக்குத் தெரியாதா? மாமனாரைக் குறைவு படுத்திப் பேசினால், நம் தந்தையைக் குறைவு படுத்திப் பேசுகிறார் என்று பெண்ணுக்குக் கோபம் £66