பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அநாயாச மரணம் உடம்போடு வாழ்கின்ற உயிர்கள் மரணம் அடைவதற்கு முன் நரை, திரை, மூப்பு என்பன வருகின்றன. பிணி வந்து நலி கின்றது. உடம்பில் அப்போது பல வகை வேதனைகள் உண்டா கின்றன. அதனால் பலர், 'கடவுளே, எனக்கு அநாயாசமான மரணம் கிடைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொள்வார்கள். மரணமே வேண்டாம் என்றால் அது நடக்காது. ஆதலால் அநாயாசமாக, துன்பம் இன்றி, உயிர் போக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்கள். இந்த உலகத்தில் நுகர வேண்டிய அநுபவங்களை எல்லாம் பெற்று, ஒவ்வொரு நாளும் பலவித மான துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள், 'கடவுளே, அநாயாச மாக என்னைக் கொண்டுபோக மாட்டாயா?" என்று கேட்பது நம் காதில் விழுகிறது உண்டு. அருணகிரியார் அப்படிக் கேட்க வில்லை. 'இந்த உடம்பு இருக்கும்போதே என்னைக் காத்தருள வேண்டும்; இன்ப வாழ்வை அருள வேண்டும்' என்று கேட் கிறார். அவர் கேட்கிற இன்பம் மோட்ச இன்பம். 'மோட்சம் என்பது உடம்போடு இருக்கிற வரையிலும் கிடைக்காது. உடம்பை விட்டு உயிர் புறப்பட்ட பிறகே கிடைக்கும் என்று உலகிலுள்ள மதங்கள் சொல்கின்றன. இந்த நாட்டில் உள்ள சமயவாதிகளில் சிலரும் மோட்சம் என்பது இந்தப் பிறவிக்குப் பின்பே கிடைப்பது என்பார்கள். வாழ்க்கையின் இன்பம் சிலர், "செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்று இருக்கிறீர்களே வைய வாழ்க்கைக்குப் பயன் அளிக்காத தெய்வம் எதற்கு? வான வாழ்வைப் பார்த்து வைய வாழ்வை ஏன் உருக்குலைத்துக் கொள்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். நாமும் அவர்கள் சொல்வது நியாயமென்று நினைத்துக் கொண் டிருக்கிறோம். அருணகிரியார் ஞானசம்பந்தப் பெருமான் முதலி யவர்கள் வைய வாழ்வை நினைக்காமலா வான வாழ்வை நினைந்து வாழ்ந்தார்கள்? வைய வாழ்வில் அவர்கள் ஒவ்வொரு கணமும் நன்றாக வாழ்ந்தார்கள்; புகழ் வாழ்வு வாழ்ந்தார்கள். நாமோ வாழத் தெரியாமல் வாழ்வில் ஒவ்வொரு கணமும் செத்துக் கொண்டிருக்கிறோம். 'கோழை பலமுறை சாகிறான்” 172