பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் என்பது ஆங்கிலப் பழமொழி. காலனை இக்கோழைகள் எதிர்த்து நிற்கமாட்டார்கள் என்பது இருக்கட்டும். போலீஸ்காரனுக்கு முன்னாலேகூட இவர்கள் நிற்கமாட்டார்கள்; அமீனாவுக்கு முன்னாலே நிற்க மாட்டார்கள்; கலெக்டர் முன்னாலே நிற்க மாட்டார்கள். இவர்கள் காலனை எதிர்த்து நிற்பது எங்கே? அருணகிரிநாதரைப் போன்றவர்கள் நம்மைப் போலக் கோழை அல்லர். யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தம் கொள்கையை நிலை நாட்டி நன்றாக வாழ்ந்தவர்கள். இந்த வாழ்க்கையிலேயே இறையின்பத்தை நுகர்ந்தார்கள். “இத்தேகமொடு காண்பனோ' என்று தாயுமானவர் ஏங்குகிறார். 'இத்தேகம் இருக்கும்போதே சந்தேகம் இல்லாமல் எனக்கு உன்னுடைய திருவருள் பதிய வேண்டும். நான் சோறு சாப்பிடுவது போல, தண்ணீர் பருகுவது போல, வெற்றிலை மெல்லுவது போல உன்னுடைய திருவருளை நான் நுகர வேண்டும்' என்று ஞானிகள் வேண்டினர். இறைவனை உணர்தல் இறைவன் அருளை நாம் தெளிவாக உணரலாம் என்று மகாத்மா காந்தி சொன்னார். அவர் மகாஞானி என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் நம்மைப் போன்ற அஞ்ஞானியும் அல்ல. நல்ல அநுபவி. அவர் அநுபவத்திற்கும் அருணகிரிநாதருடைய அநுபவத் திற்கும் எத்தனையோ தூரம் இருக்கலாம். ஆனால் நம்மைக் காட்டிலும் மிகச் சிறந்த அநுபவம் உடையவர் மகாத்மா. அப்படிப் பார்க்க வேண்டும். நம்மை அருணகிரிநாதர் என்று எண்ணிக் கொண்டு, 'காந்தி என்ன? அவர் வெறும் அரசியல் தலைவர்தாமே?' என்று சொல்லிவிடக் கூடாது. { } { எங்கள் ஆசிரியர் ஒன்று சொல்வார்கள். ' ராமனும் கிருஷ்ண னும் என்ன, சாதாரண மனிதர்கள் தாமே ? சிவபிரானைப் போன்றவர்களா?' என்று சில சைவர்கள் சொல்வார்கள். சிவனை நோக்க ராமன் தாழ்ந்தவனாக இருக்காலாம். நம்மைச் சிவனாக எண்ணிக் கொண்டு ராமனும் கிருஷ்ணனும் தாழ்ந்தவர்கள் என்று பேசலாமா? அப்பாவுக்குப் பக்கத்தில் இருப்பதனால் குழந்தை அப்பா ஆகிவிடுமா? நம்மைவிட ராமன், கிருஷ்ணன் உயர்ந்த 173