பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் அவர்களுக்குக் குளிர் சுரம் வந்தது. அதை நளிர் சுரம் என்றும் சொல்வார்கள். எந்த மருந்துக்கும் அந்த வெப்பு நோய் கட்டுப் படாமையால் சம்பந்தர் ஒரு பதிகம் பாடினார். நளிர் சுரம் நீங்கி விட்டது. அர்த்தநாரீசுவரர் திருச்செங்கோடு மிகப் பழமையான தலம். அங்கு எழுந் தருளியுள்ள மூர்த்தி அர்த்தநாரீசுவரர். மாதிருக்கும் பாதியனாகிய கோலமே பழைய திருக்கோலம். இறைவன் உலகத்திற்கு அருள் செய்ய உருவம் கொண்டு அருளிய போது முதல் முதலில் அர்த்தநாரீசுவர உருவம் வந்தது. ஐங்குறுநூற்றில் பாரதம் பாடிய பெருந்தேவனார் அப்படிச் சொல்கிறார். 'நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே." மாணிக்கவாசகரோ அதனைத் தொன்மைக் கோலம் என்பார். "தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துதாய் கோத்தும்பி" என்று சொல்கிறார். உலகத்திற்கு முதலில் தோற்றிய கோலம் பாதி உமையும், பாதி ஆண்டவனுமாக அமைந்த அந்தத் திருக்கோலம். செங்கோட்டு வேலவன் அங்கே முருகனும் எழுந்தருளியிருக்கிறான். எல்லாச் சிவால யங்களிலும் முருகப் பெருமானுக்குக் கோயில் உண்டு. சில தலங் களில் முருகனுக்கு அதிகப் பெருமை இருக்கும்; மற்ற மூர்த்தி களுக்கு அவ்வளவு சிறப்பு இராது. தேவாரத்தில் பாடல் பெற்ற தலமாகத் திருப்பரங்குன்றம் இருந்தாலும் சிவபிரான் சந்நிதி அங்கே இருக்கிறது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. பிள்ளை கலெக்டரானால் அவருடைய குமாஸ்தாவைத் தெரிந் 175