பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் என்று அத்தலத்தில் உள்ள முருகனைச் சொல்கிறார். இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ச்சி பண்ணினேன். ஒன்று விளங்கிறது. அந்தப் பாட்டுக்கும் கந்தர் அலங்காரத்தில் இன்று நாம் பார்க்கப் போகிற பாட்டுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த அலங்காரப் பாட்டில் அவர் முருகனிடம் என்ன பிரார்த்தனை செய்து கொள்கிறார்? 'ஆண்டவனே, எல்லோரையும் போல நான் மரணம் அடையக் கூடாது. இந்தக் குடிசை குலைவதற்கு முன்னே வந்து நீ என்னைக் காத்தருள்வாய்' என விண்ணப்பம் போடுகிறார். இந்த விண்ணப்பம் பலித்தது. அதனால் கந்தர் அநுபூதியில், "என் வேண்டுகோளை நிறைவேற்றி வைத்தாயே, அப்பனே! உனக்கு மிக்க வந்தனம்' என்று நன்றியறிவுடன் பாராட்டுகிறார். கந்தர் அலங்காரப் பாட்டைப் பார்க்கலாம். தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே, வை வத்த வேற்படை வானவ னே,மற வேன்உனைநான்; ஐவர்க்கு இடம்பெறக் கால்இரண்டு ஓட்டி அதில் இரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே. இது அருணகிரியார் செய்து கொண்ட விண்ணப்பம். செழுஞ்சுடர் விளக்குப் போல இருக்கிறான் ஆண்டவன். விளக்கானது சுடர்விட வேண்டுமானால் அகல் இருந்தால் மட்டும் போதாது; நெய்யும், திரியும் வேண்டும். அது செழுமை இல்லாத விளக்கு. ஆண்டவனோ வேறு எதன் துணையையும் வேண்டாமல் சுயம் பிரகாசனாக இருக்கிறான். 'சூரியனுக்கு யாரும் உதவி செய்ய வில்லையே! அவன் சுயம்பிரகாசன் அல்லவா?’ என்று கேட்கலாம். ஆண்டவனது அருளாகிய திரியும், நெய்யும் இருப்பதனால்தான்

  • பெரும்பெயர் முருகன் என்னும் புத்தகத்தில் உள்ள நாகாசல வேலவன்’ என்ற கட்டுரையையும் பார்க்க.

177