பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் மேல் ஏற முடியாது. ஏறும்போது அடிக்கடி முழங்காலைத் தழுவிக் கொண்டே ஏறவேண்டும். அது செங்குத்தாக இருக்கும். எங்கே பார்த்தாலும் தெய்வத் தன்மை பொருந்தி இருக்கும் மலை அது. ஆதிசேஷன் அங்கே பூசித்தான் என்பார்கள். அவனுடைய முடி ஒன்றே அப்படி ஆயிற்று என்றும் சொல்வர். ஆகவே அதை நாகமலை, அரவகிரி, நாகாசலம் என்று சொல்வர். "நாகாசல வேலவனே' என அம்மலை மீது எழுந்தருளியிருக்கும் வேலனைத் தான் அருணகிரியார் கந்தர் அநுபூதியில் சுட்டுகிறார். அடையாளம் மலைமேலே இருக்கிற விளக்குத் தெளிவாகத் தெரியும். பார்க்கிறவர்களுக்குத்தான் தெரியும். வேறு திசையில் பார்த்தா லும், கண்ணை மூடிக் கொண்டாலும் அது தெரியாது; கண் இல்லாக் குருடர்களுக்கும் தெரியாது. நமக்கு அந்தச் சுடர் தெரியவில்லையே என்றால், இந்த மூன்று வகையில் ஒரு வகையினர் நாம் என்றே கொள்ள வேண்டும். அருணகிரிநாதர் குருடர் அல்ல. அவர் மலை மேல் இருக்கின்ற செழுஞ்சுடரை நன்றாகப் பார்த்தார். ஆகவே, தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே! என்றார். அந்தச் சுடருக்கு ஒர் அடையாளம் சொல்கிறார். முதலில் சுடர்ப் பிழம்பு தோற்றியது. பிறகு அடையாளமாகிய வேல் தோற்றியது. இந்தப் பல்பு ஒளி விடுகிறது. முதலில் பல்புதான் தோன்றுகிறது. உற்றுப் பார்த்தால் உள்ளே உள்ள கம்பி தோன்றும். மலைமேல் இருக்கும் செழுஞ்சுடரைக் கண்டார் அருணகிரியார். மேலும் அதை உற்று நோக்கினார். அந்தச் செழுஞ்சுடருக்குள் ஒரு கதிர் தோன்றியது. அதுதான் வேல். வைவைத்த வேற்படை வானவனே! (வை வைத்த - கூர்மையை வைத்திருக்கிற. வேல் படை - வேலாயுதத்தை உடைய வானவனே - தெய்வமே.) மற்ற வேல்கள் அழுக்கடைந்த உடலுக்குள் பாய்ந்து, ரத்தம் தோயந்து தானும் அழுக்கடையும்; முனை மழுங்கும். மற்றப் 181