பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பேர்களைக் கொலை செய்கின்ற வேல் போன்றது அல்ல எம்பெருமான் திருக்கரத்தில் உள்ள வேல். இந்த வேல் அஞ் ஞானத்தைப் போக்குகின்ற ஞானத்திருவுருவம் உடையது. அத னாலே ஞான சக்தி என்ற பெயர் உடையது. கூர்மையான வேலைப் படையாகக் கொண்ட தெய்வம், செங்கோட்டு வேலன். பீடிகை அருணகிரியார் அப்பெருமானைப் பார்த்து, மறவேன் உனைநான் என்றார். உத்தியோகம் வேண்டுகிறவர்கள், “எனக்குத் தாங்கள் அந்த வேலையைக் கொடுத்தால் உங்களை எப்பொழுதும் மறக்க மாட்டேன்' என்று சொல்வது இல்லையா? அதுபோலத் தாம் சொல்லும் விண்ணப்பம் இன்னது என்று தெரிவிப்பதற்கு முன்னாலே, 'மறவேன் உனை நான்' எனச் சொல்கிறார். ஆண்டவன் அருணகிரியார் துதித்ததைக் கொண்டு இன்புறு கிறான். தன்னுடைய பக்தன், தன் இருப்பிடத்தைக் கண்டு, தன் னுடைய ஒளியைக் கண்டு, தன் கரத்திலுள்ள வேலைக் கண்டு பாராட்டுகிறான் என்ற பெருமிதத்தோடு இருக்கிறான். அப்பொழுது அருணகிரியார், 'முருகா, இனி நான் சொல்லப் போவதைக் கொஞ்சம் கேளப்பா' என்ற குறிப்போடு, 'மறவேன் உனை நான்” என்று பீடிகை போடுகிறார். நம்மிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்த ஒருவர் திடீர் என்று, 'ஒரு விஷயம். உங்களை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்' எனச் சொல்ல ஆரம்பித்தால், அவர் ஏதோ வேண்டுகோளை விடுக்கப் போகிறார் என்பதை உணர்ந்து, அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கக் காதை நீட்டுவோம் அல்லவா? அதைப் போல எம்பெருமானிடத்தில் அளவற்ற பக்தி உடைய அருண கிரியார், "மலைமேல் இருக்கும் செழுஞ்சுடரே வேற்படை வானவனே!" எனத் துதித்து விட்டு, "உன்னை நான் என்றைக்கும் மறவேன்' என்று கூறிப் பின்னே தாம் வெளியிடப் போகும் பிரார்த்தனை ஒன்று உண்டு என்பதைக் குறிப்பிக்கிறார். ஆண்டவன், 'மறவேன் உனை நான்' என்று சொன்னவுடனேயே, இவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கச் சித்தனாக இருக்கிறான். அவர் சொல்கிறார்: i82