பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே. நாம் வாழும் குடிசை 'எனக்கு இரண்டு கால் நட்டு, இரண்டு கை வைத்து ஒரு குடிசை கட்டிக் கொடுத்திருக்கிறாய். இது எனக்குச் சொந்தம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் நீ வேறு ஐந்து பேர்களைக் குடியிருக்கச் செய்திருக்கிறாயே!” ஐவர்க்கு இடம் பெற. கால், கை என்பவை உடம்பில் இருக்கின்றன. கட்டிய வீட்டிலும் அவை உண்டு. துணுக்குக் கால் என்று பேர். குறுக்கே போடும் கட்டைகளுக்குக் கை என்று பேர். 'இந்தக் குடிசையை எனது என்று எண்ணி ஏமாந்து போவேனா? ஐந்து பேர்களோடு நானும் ஒருவனாக அல்லவா இங்கே ஒண்டிக் கொண்டிருக்கிறேன்? இது நிலையானது அன்று; ஒரு புயல் வந்தால் போதும், குலைந்து போகுமே! இது குலைவதற்குள் எனக்கு வேறு ஓர் இடம் காட்ட மாட்டாயா?" என்று கேட்கிறார். ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே. குலையும் வீடு - காஞ்சீபுரத்தில் பெரிய உற்சவம் நடக்கிறது. அங்கே ஒருவர் போகிறார். அங்குள்ள தம் நண்பர் ஒருவர் வீட்டில் தங்குகிறார். இவரைப் போல இன்னும் சில விருந்தாளிகள் அங்கே இருக் கிறார்கள். இவருடைய நண்பர் இவருக்கு உணவு இட்டு, உபசாரம் செய்து, படுக்கவும் நல்ல படுக்கை தலையணை அளித்து, ஓர் இடத்தைக் காட்டுகிறார். காலையில் எழுந்திருந்தவுடன் இவர், 'நான் ஊருக்குப் போய் வருகிறேன்' என்று சொல்லிக் கொள் கிறாரே. யன்றி, அதையே தம் வீடு என்று எண்ணி, அதைச் க.சொ.II-13 183