பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் இடம் மயானம். வாழ்வதற்கு வேண்டுமானால் பல பல வீடுகளைக் கட்டிக் கொண்டு இருக்கலாம். இறந்தால் போகிற இடம் மாயனம் ஒன்றுதான். இறந்தால் நமது பிள்ளைகூட நம் உடம்பை வீட்டில் எரிக்க அநுமதிக்க மாட்டான். மயானத்தில் கட்டிடம் எதுவும் இல்லை. ஆனாலும் எல்லாச் சரீரங்களும் போக வேண்டிய இடம் அதுதான். ஒவ்வொரு நாளும் மயானத்துக்குச் சடலங்கள் போய்க் கொண்டே இருக்கின்றன. அது நமக்கும் புயல் வரும் என்பதை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. அஞ்சி னாலும் அஞ்சாவிட்டாலும் புயல் வரும். அஞ்சுபவர்கள் புயல் வந்தால் தப்ப வழி தேடி வைத்துக் கொள்வர். 'அஞ்சாமல் இருப்பேன்’ என்று சும்மா இருந்தால் புயல் வரும்போது துன்பம் மிகுதி. இடர் வந்த பிறகு துணை தேடுவதைக் காட்டிலும் இடர் வருமே என அஞ்சித் துணையோடு இருப்பது நல்லது. அந்தத் துணையை நாடுகிறார் அருணகிரியார். விளக்கும் ஆயுதமும் நாம் எல்லோரும் கடைசியாகப் பிரயாணம் செய்ய வேண்டிய நெடுவழி ஒன்று இருக்கிறது. 'துணையோடல்லது நெடுவழி போகேல் என்றல்லவா சொல்லியிருக்கிறார்கள் இருட்டாக இருக்கிற அந்த நெடுவழியில் நாம் பயமின்றிப் போக வேண்டு மென்றால் ஒளி வேண்டும். ஆண்டவனின் அருள் ஒளி இல்லாத இடங்கள் யாவும் இருள் நிறைந்த இடங்கள். 'இருள் தருமா ஞாலம்' என்று சொல்வார்கள். இருட்டாக இருக்கிற இடத்தில் திருடர்கள் இருப்பார்கள்; விலங்குகள் இருக்கும். கையில் விளக்கு, ஆயுதம் எதுவும் இன்றி அத்தகைய இடங்களில் போனால் திருடர்கள் நம்மை அடித்துக் கொன்று நம்மிடம் இருப்பனவற்றைப் பறித்துப் போவார்கள். அவ்வழியே போயாக வேண்டுமென்றால் விளக்கை மாத்திரம் எடுத்துப்போனால் போதாது? விளக்கானது திருடர் களைக் காட்டும். திருடர்கள் நம்மை வந்து தாக்குகிறபோது அவர்களை எதிர்க்க நம் கையில் எதுவும் இல்லாததால் அவர் களிடையே நாம் சிக்கிக் கொண்டு அல்லலுறநேரும். விளக்கு இன்றி, ஆயுதம் மாத்திரம் கொண்டு போனாலும் திருடன் இருக் கிற இடம் தெரியாது. ஆகையால் விளக்கும் வேண்டும்; ஆயுத மும் வேண்டும். 1835