பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 முருகப் பெருமான் செழுஞ்சுடர் விளக்காகத் தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழ்கிறான். அவனிடம் கூர்மையான வேலாயுதமும் இருக்கிறது. நமக்குத் துணையாக அவன் நெடு வழிப் பயணத்தின்போது வந்தால் அவனே ஒளி காட்டுவான். திருடர்கள் வந்தால் தன் வேலாயுதத்தை வீசி நம்மைக் காப்பாற்றுவான். வந்த பின் காக்கும் மனமுடையவர்கள் இந்த இருட்டு நெடுவழியில் துணையின்றிப் போகக் கூடும். போனால் திருடன் வரும் போது துணைதேட முடியாமல் அவனுக்கு இரை யாகி விடுவார்கள். திருடன் வந்தால் என்ன செய்வது என்று அஞ்சி முன்பே துணை தேடி வைத்துக் கொண்டு போகிறவர்களே பிழைக்க முடியும். தோன்றாத் துணை வருமுன் காப்பவர் அருணகிரியார். ஆதலாலே அவர் துணை தேடுகிறார். புயல் வருவதற்கு முன்பே துணைபெற்றுவிட்டால் புயலினால் குடிசை அழியும்போது முருகன் ஆதரவு அளித்துக் காப்பாற்றுவான். நடுவீதியில் நாற்றமுற்றுக் கிடக்காம்ல அவன் அரண்மனையில் ஆனந்தமாக இருக்கலாம். ஐவருக்கு இடம்பெறக் காலிரண்டு ஒட்டி, இரண்டு கை வைத்த வீட்டை நமது என்று எண்ணி வாழ்வதால் நாம் செய்ய வேண்டிய நெடும் பயணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக் கிறோம். நெடும் பயணம் பண்ணத்தான் வேண்டும். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அப்பயணம் உண்டு. தேக அநுபவம்முற்றியிருப்பதனாலே தெய்வத்தை மறந்து விடுகிறோம். சரீர அபிமானம் மற்ற எல்லாவற்றையும் மறைக் கிறது. நல்ல உணவைச் சாப்பிட்டு விட்டு, திண்டு தலையணை யில் படுத்திருக்கும்போது பெளதிகமான உடம்பு இயங்குவதற்குக் காரணமாக இருக்கும் உயிரை மறந்து விடுகிறோம். உடம்பைப் பற்றிய நினைவு உயிரை மறைக்கிறது. உடம்பை இயக்குவது உயிர் என உணர்ந்தவர்கள், உயிரை இயக்கித் தோன்றாத் துணையாக இருப்பது எது எனச் சிந்திக்க வேண்டாமா? செத்துப் போனான் ஒருவன். அவனுடைய உறவினர்கள் எல்லாம் குய்யோ முறையோ எனக் கத்தி அலறி அடித்துக் கொண்டு அழுதார்கள். அவர்களைப் பார்த்து ஒருவர், "நீங்கள் i86