பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் சொல்லால் நினைப்பூட்டுகிறார். "வை வைத்த வேற்படை வான வனே என்று இங்கே அழைத்தார். அங்கே 'வேலவ' என்றார். இங்கே சொன்னவற்றைக் குறிப்பிக்க இந்த அடையாளம் போதாதா? அவர் போட்ட விண்ணப்பம் பலிக்காவிட்டால் என்ன ஆயிருக்கும்? மற்றவர்களைப் போல அவரும் மரணம் அடைந்திருப்பார். அவரது கிளை கூகா எனக் கூடி அழுதிருக்கும். அப்படியின்றி என் விருப்பத்திற்குச் செவி சாய்த்து, நான் கேட்டுக் கொண்ட வாறு இவ்வீடு குலையும் முன்னே வந்து காத்தருளினாயே!” என்ற நன்றியறிதலோடு கந்தர் அநுபூதியில் பாடுகிறார். "கூகாஎன என்கிளை கூடியழப் போகாவகை மெய்ப்பொருள் பேசியவா! நாகாசல வேலவ! நாலுகவித் தியாகாசுர லோக சிகாமணியே! ஆகவே அருணகிரிநாத சுவாமியின் வாழ்க்கையில் திருச்செங் கோடு ஒரு முக்கியமான தலம். அந்தத் தலம் அவருடைய விண்ணப்பத்தைப் பலிக்க வைத்த தலம். அவர் போட்ட விண்ணப்பந்தான் இந்தப் பாட்டு தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே! வைவைத்த வேற்படை வானவ னே!மற வேன்உனை நான்; ஐவர்க்கு இடம்பெறக் கால்இரண்டு ஒட்டி அதில் இரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே. (தெய்வத்தன்மை பொருந்திய அழகிய மலையாகிய திருச்செங் கோட்டில் எழுந்தருளியிருக்கும் செழுமை மிக்க சோதியே கூர்மையை உடைய வேலாயுதத்தையுடைய தேவனே! உன்னை நான் மறக்க மாட்டேன். ஐந்து பொறிகளுக்கு இடம் கிடைக்கும்படியாக இரண்டு காலை நிறுவி அதில் இரண்டு கைகளைப் பொருத்திய உடம்பாகிய வீடு மரணம் அடைந்து குலைவதற்கு முன்பாகவே வந்து அடியேனைக் காத்தருள்வாயாக! வை-கூர்மை. ஐவர்-ஐம்பொறிகள். வீடு என்றது இங்கே உடம்பை.) 191