பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் 1 நயமான சரக்கு ஓர் ஊரில் ஒரு செட்டியார் கடை வைத்திருந்தார். அவரிடம் நயமான சரக்குகள் கிடைக்கும் என்பது ஊர் அறிந்த செய்தி. அந்த ஊருக்குப் புதிதாக ஒருவர் வந்தார். அவர் எப்போதுமே நயமான பண்டங்களையே வாங்குபவர். பணம் எவ்வளவு செலவழிந் தாலும் சரி, நல்ல சரக்குகளையே வாங்கவேண்டும் என்ற கொள்கையை உடையவர். அந்தச் செட்டியாரிடம் மிகவும் நல்ல சரக்குகள் இருக்கின்றன என்றும், பணச் செலவைப் பாராதவர் களுக்கு அவரிடம் உயர்ந்த பண்டங்கள் கிடைக்கும் என்றும் ஊர்க்காரர்கள் சொல்லிக் கொண்டார்கள். புதிய மனிதருக்குக் காபியில் விருப்பம் அதிகம். அவருக்கு என்ன? எல்லோருக்குமே அந்த அமுத பானத்தில் விருப்பம் இருக்கத்தான் இருக்கிறது. அவர் மிகவும் உயர்ந்த ரகமான உருண்டைக் கொட்டையை வாங்கி உபயோகிப்பார். புதிய ஊரில் உயர்ந்த காபிக் கொட்டை கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஊர்க்காரர்கள் செட்டி யாரைப் பற்றிச் சொன்னதைக் கேட்டபோது அவருக்குத் திருப்தி ஏற்பட்டது. இங்கே நல்ல காபி சாப்பிடலாம்' என்ற எண்ணம் உண்டாயிற்று. செட்டியாரைக் கண்டு அவர் விசாரித்தார். செட்டியார், 'நம்மிடம் எல்லாமே உயர்ந்த சரக்குத்தான். மட்டமான சரக்கே இந்தக் கடைக்குள் வராது. பணம் வாங்கிக் கொண்டுதானே வியாபாரம் செய்கிறோம்? சும்மாவா கொடுக்கிறோம்? நல்ல சரக்குக்குத் தக்கபடி பணம் கேட்டால், வேண்டியவர்கள் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறார்கள் என்று சொன்னார்.