பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியான இரகசியம் சுமந்து திரிவதை ஞானிகள் விரும்பமாட்டார்கள். உயிர் பழ வினையின் பயனை அநுபவிக்க வந்து தங்கும் குடிசை இது. நிரந்தரமாக உள்ள சிறந்த மோட்சமே உயிர் இன்பம் பெறும் இல்லம்; சிறந்த வீடு; சீர் அகம். அந்தச் சீரகத்தை இறைவன் அருளினால் மறுபடியும் இந்தப் பெரிய காயத்தினுள் உயிர் வந்து புகவேண்டிய அவசியம் இல்லை. இந்த அழகிய கருத்தை அந்தப் பாட்டுச் சொல்கிறது. 'ஏரகத்துச் செட்டியாரே, வெம்மையான இந்த உடல் உயிர் நீங்கிச் சுக்குப்போல ஆகிவிட்டால் அயபஸ்பத்தால் என்ன பயன் உண்டாகும்? இந்தப் பயனற்ற பண்டத்தை இங்கே யார் சுமந்து கொண்டு தொல்லைப் படுவார்கள் எப்போதும் அழியாத சிறந்த மோட்சத்தைத் தருவீரானால் இந்தப் பெரிய உடம்பை நான் விரும்பமாட்டேன்' என்று அதற்குப் பொருள் செய்ய வேண்டும். “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியா ரே!” இந்தச் செட்டியாரிடம் அருணகிரி நாதர், 'உம்முடைய இரகசியம் அம்பலமாகிவிட்டது' என்று சொல்கிறார். "கொட்டு மேளத்துடன் ஊர் அறிய வெளிப்பட்டு விட்டது” என்று கூறு கிறார். 'எனக்கு மாத்திரம் நயமான காபிக் கொட்டையைக் கொடுத்தீர் என்றல்லவா நினைத்தேன்? ஊரார் எல்லோருக்கும் கொடுத்துவிட்டீரே! உம்முடைய இரகசியம் வெளிப்பட்டு விட்டதே! என்று சொன்ன காபி பக்தரைப் போல இந்தப் பக்தர் சொல்கிறார். இனி அதைக் கவனிக்கலாம். 2 முருகன் சொன்ன இரகசியம் முருகன் அருணகிரிநாதருக்கு ஒர் உபதேசம் செய்தான். அதை மிகவும் இரகசியமாகச் சொன்னான். அவர் பக்தித் திறத்தை யும் பட்ட வேதனையையும் கண்டு, இனி அந்தத் துன்பத்தை அடையாத வகையை அருள வேண்டுமென்ற விருப்பத்தால் அந்த 197